Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்கலில் ரோகித் சர்மா.. அதை செய்தே ஆகனும்.. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் விருந்து ரெடி!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

வழக்கம் போல இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலும் மும்பை அணி தோல்வியுடனே தொடங்கியுள்ளது.

ரோகித்திற்கு சிக்கல்

ரோகித்திற்கு சிக்கல்

ஐபிஎல்-ல் முதல் போட்டியில் தோல்வியடைவது இது 10வது முறையாகும். ஆனால் இந்த முறை சற்று மோசமான தோல்வி என்று தான் கூற வேண்டும். டெல்லி அணியில் அயல்நாட்டு வீரர்கள் பெரியளவில் இல்லை. முன்னணி வீரர்கள் இன்றியே வெற்றி பெற்றது. இதனால் 2வது போட்டியிலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை உள்ளது. மறுபுறம் ராஜஸ்தான் அணி முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

மும்பை - ராஜஸ்தான் அணிகள் இதுவரை 25 முறை ஐபிஎல்-ல் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13 முறை மும்பை அணி தான் வெற்றி பெற்றுள்ளது. 11 முறை ராஜஸ்தான் அணி வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக நடைபெற்ற 6 போட்டிகளில் இரு அணிகளும் 3-3 என சமநிலையுடன் உள்ளன.

ஸ்பெஷல் தகவல்

ஸ்பெஷல் தகவல்

இன்று போட்டி நடைபெறும் DY பாட்டில் மைதானத்தில் இந்த இரு அணிகளும் ஒரே ஒருமுறை மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணியை 103 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டாக்கி மும்பை அசத்தியிருந்தது. இதனால் இன்றைய போட்டியிலும் அதே போன்ற வரலாற்றை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Recommended Video

IPL 2022: Fit-again Suryakumar Yadav joins Mumbai Indians ahead of RR | Oneindia Tamil
பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு ரன் விருந்து என்று தான் கூற வேண்டும். பேட்டிங் டிராக்காக இருப்பதால் 200 ரன்கள் வரை அடிக்க வாய்ப்புள்ளது. இந்த போட்டி மதியம் நடைபெறுவதால் பனிப்பொழிவு எதுவும் இருக்காது. எனவே முதலில் பேட்டிங் செய்யக்கூடிய அணியும் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Saturday, April 2, 2022, 16:43 [IST]
Other articles published on Apr 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+