Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேலி செய்த ஐதராபாத் அணி.. திருப்பி பந்தால் அடித்த ராணா..செம சம்பவம் பண்ணிட்டாரு

மும்பை: ஐபிஎல் 25வது லீக் ஆட்டத்தில் கேலி செய்த ஐதராபாத் அணிக்கு திரும்பி நிதிஷ் ராணா தக்க பதிலடி தந்தார். மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்,

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீசியது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டதால் கேகேஆர் வீரர்கள் திணறினர்.

குறிப்பாக, ஐதராபாத் அணியின் நடராஜன், உம்ரான் மாலிக் ஜோடி மட்டும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி கொல்கத்தாவுக்கு பஞ்ச் வைத்தது.

ஸ்ரேயாஸ் அவுட்

ஸ்ரேயாஸ் அவுட்

நடராஜன் வீசிய 5வது ஓவரில் முதல் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதே போன்று உம்ரான் மாலிக்கும், ஐதராபாத் பேட்டிங்கை பதம் பார்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை உம்ரான் மாலிக் சாய்த்தார்.

கொண்டாடிய ஸ்டேயின்

கொண்டாடிய ஸ்டேயின்

இதனையடுத்து, உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சை டக்அவுட்டில் இருந்த ஸடேயின் கொண்டாடி, கைத் தட்டி ஆரவாரம் செய்தார். இது கொல்கத்தா அணிக்கு மரியாதை குறைவாக தென்பட்டது, இதனை களத்தில் நின்று கவனித்த நிதிஷ் ராணா திருப்பி கொடுத்தார். நடராஜன் வீசிய பந்தை சிக்சருக்கு துரத்தினார்.

திருப்பி கொடுத்த ராணா

திருப்பி கொடுத்த ராணா

இதே போன்று ஆட்டத்தின் ஆட்டத்தின் 12.1வது ஓவரின் போது நிதிஷ் ராணா, நடராஜன் பந்துவீச்சை சிக்சருக்கு அடித்தார். அது ஐதராபாத் அணி வீரர்கள் அமர்ந்திருத்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன பெட்டியின் கண்ணாடியை பதம் பார்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்ததை ஐதராபாத் அணி கொண்டாட, அதற்கு நிதிஷ் ராணா திருப்பி தந்தார்.

அரைசதம்

அரைசதம்

நிதிஷ் ராணா அடித்த பந்தை கிட்டதட்ட 150 கிலோ மீட்டர் வேகத்தில் உம்ரான் மாலிக் வீசி இருந்தார். 36 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிதிஷ் ராணா 6 பவுண்டரி, 2 சிக்சர் என கவுண்டர் அட்டாக் கிரிக்கெட்டை இக்கட்டான நிலையில் ஆடினார். கடந்த 5 போட்டிகளாக சொதப்பிய ராணா மொத்தமாகவே 69 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் தற்போது திருப்பி கொடுத்துள்ளார்.

Story first published: Friday, April 15, 2022, 23:47 [IST]
Other articles published on Apr 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+