Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 7 போட்டிகளே.. 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி.. வரப்போகிறதா ரன்ரேட் முறை - புள்ளிப்பட்டியல்!

மும்பை: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ப்ளே ஆஃப் ரேஸுக்கான போட்டி மிகவும் கடுமையானதாக மாறியுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் தற்போது 63 லீக் போட்டிகளை கடந்த இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இன்னும் 7 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள சூழலில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஒரே ஒரு அணி மட்டுமே தேர்வாகியுள்ளது.

ப்ளே ஆஃப் ரேஸ்

ப்ளே ஆஃப் ரேஸ்

குஜராத் அணி 13 போட்டிகளில் 20 புள்ளிகளை எடுத்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை உறுதி செய்துவிட்டது. ராஜஸ்தான் அணியுடன் தோல்வியடைந்ததால் லக்னோ அணி 3வது இடத்திற்கு சறுக்கியுள்ளது. ராஜஸ்தான் அணியும் 16 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த இரு அணிகளும் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் ப்ளே ஆஃப் செல்வதை உறுதி செய்துவிடும்.

கடும் போட்டி

கடும் போட்டி

ஆனால் 4வது இடத்திற்கு தான் 4 அணிகள் போட்டி போட்டு வருகின்றன. ஆர்சிபி அணி தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் செல்லும். ஆனால் ரன்ரேட் அடிப்படையில் வெளியேற வாய்ப்புள்ளது. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள டெல்லி அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றுவிட்டால் ப்ளே ஆஃப் சென்றுவிடலாம்.

நெட்ரேட் முறை

நெட்ரேட் முறை

பஞ்சாப் அணி இன்னும் 6வது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம். இதே போல கொல்கத்தா அணி தனது ப்ளே ஆஃப் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த அணி தனது கடைசி போட்டியில் வென்றாலும் 14 புள்ளிகளையே பெறும். எனினும் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது.

சோகத்தில் ரசிகர்கள்

சோகத்தில் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. ஐதராபாத் அணியும் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. இந்த வாரத்தில் உள்ள 6 போட்டிகளில் ப்ளே ஆஃப் சுற்றிற்கான 4 அணிகள் உறுதி செய்யப்பட்டுவிடும்.

மீதமுள்ள போட்டிகள்

மீதமுள்ள போட்டிகள்

மே 16 - பஞ்சாப் vs டெல்லி கேப்பிடல்ஸ்

மே 17 - மும்பை vs ஐதராபாத் அணி

மே 18 - கொல்கத்தா vs லக்னோ அணி

மே 19 - ஆர்சிபி vs குஜராத் அணி

மே 20 - ராஜஸ்தான் vs சிஎஸ்கே அணி

மே 21 - மும்பை vs டெல்லி கேப்பிடல்ஸ்

மே 22 - ஐதராபாத் - பஞ்சாப் அணி

Story first published: Monday, May 16, 2022, 13:01 [IST]
Other articles published on May 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+