Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவின் சொதப்பலுக்கு என்ன காரணம்.. 3 முக்கிய விஷயங்கள்.. பெரும் குழியில் சிக்கிய வீரர்கள்!

மும்பை: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Recommended Video

IPL 2022 :Kolkata Knight Riders Beat Chennai Super Kings By 6 Wickets | Oneindia Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வரும் இந்த போட்டி
வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி மிக மோசமான பேட்டிங்கை செய்தது.

மோசமான ஓப்பனிங்

மோசமான ஓப்பனிங்

ஓப்பனிங்கிற்கு களமிறங்கிய ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டெவோன் கான்வே ஜோடி முதல் ஓவருக்கு கூட தாக்குப்பிடிக்கவில்லை. ருதுராஜ் கெயிக்வாட் டக் அவுட்டும், டெவோன் கான்வே 3 ரன்களுக்கும் அடுத்தடுத்து விகெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இருவருமே உமேஷ் யாதவின் பவுலிங்கில் சிக்கினர்.

மிடில் ஆர்டர் சொதப்பல்

மிடில் ஆர்டர் சொதப்பல்

இதன் பின்னர் வந்த உத்தப்பா, அம்பத்தி ராயுடு, நிதானமாக ரன் உயர்த்துவார்கள் என்று பார்த்தால் சிறிது நேரத்திலேயே அவசரப்பட்டு தூக்கி அடிக்க முயன்றனர். இதன் விளைவு உத்தப்பா 28 ரன்களுக்கும், அம்பத்தி ராயுடு 15 ரன்களுக்கும் வெளியேறினர். பின்னர் வந்த ஷிவம் தூபே 3 ரன்களுக்கு வெளியேற சென்னை அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு சென்றது.

முதல் சிக்கல்

முதல் சிக்கல்

சென்னை அணியின் இந்த மோசமான நிலைமைக்கு 3 முக்கிய விஷயங்கள் தான் காரணம். இதில் முதாவது விஷயமே தோனி தான். கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியதே வீரர்களின் புத்துணர்ச்சியை உடைத்தது. புதிய மாற்றத்துடன் விளையாடப்போகிறோம் என்ற பதற்றத்திலேயே தவறான ஷாட்களை ஆட முற்பட்டனர்.

2வது பிரச்சினை என்ன

2வது பிரச்சினை என்ன

களத்தில் இரு பேட்ஸ்மேன்களுக்கு இடையே சரியான உடன்போக்கு இருக்க வேண்டும். ஆனால் இன்று சுத்தமாக சிஎஸ்கேவில் இல்லை. இதற்கு உதாரணம் சில ரன் அவுட் வாய்ப்புகள் தான். அம்பத்தி ராயுடு மற்றும் ஜடேஜா இடையே சரியான உடன்பாடு இல்லை. இதனால் அவசரப்பட்டு ஓட முயன்று ரன் அவுட்டானார். இதன் பின்னர் ஷிவம் தூபேவுக்கும் இதே நிலைமை தான். தூபே ரன் அவுட்டில் இருந்து தப்பிய போதும், அதன் பதற்றமே விக்கெட்டை பறித்தது.

போட்டிகளே இல்லை

போட்டிகளே இல்லை

சென்னை அணியின் டாப் ஆர்டரில் உள்ள அனைத்து வீரர்களுமே கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக எந்தவொரு போட்டியிலும் விளையாட வில்லை. டெவோன் கான்வே ஐபிஎல்-ல் முதல் முறையாக ஆடுகிறார் என்பதால், அவர் சொதப்பியிருக்கலாம். ஆனால் ருதுராஜ், அம்பத்தி ராயுடு, ஷிவம் தூபே, ராபின் உத்தப்பா என 4 வீரர்களும் பயிற்சி போட்டியை மட்டுமே நம்பி களத்திற்கு வந்துவிட்டனர். இதனை இனி வரும் போட்டிகளில் சரி செய்ய வேண்டிய பொறுப்பு ஜடேஜாவுக்கு உள்ளது.

Story first published: Saturday, March 26, 2022, 21:25 [IST]
Other articles published on Mar 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+