For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓ இதுதான் திட்டமா.. ஐபிஎல் -ல் இருந்து சூர்யகுமார் யாதவ் விலக என்ன காரணம்??.. முழு விவரம் இதோ!

மும்பை: ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார்.

Recommended Video

IPL 2022 Mumbai Indians நட்சத்திர வீரர் Suryakumar Yadav விலகல் | Oneindia Tamil

55வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

தொடர்ச்சியாக 8 தோல்விகளை பெற்ற மும்பை அணி தற்போது தான் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

மும்பை அணிக்கு பின்னடைவு

மும்பை அணிக்கு பின்னடைவு

ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தாலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்துவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் உள்ளது. அதற்காக கடந்த 2 போட்டிகளிலும் பலம்வாய்ந்த ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளை தோற்கடித்து அசத்தியது. இந்த வெற்றி தொடரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கும் போது தான் சூர்யகுமார் யாதவின் விலகல் பின்னடைவை கொடுத்துள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

சூர்யகுமார் யாதவுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் வலது கையில் காயம் ஏற்பட்டு தாமதமாக தான் ஐபிஎல் தொடருக்கு வந்தார். தற்போது இடதுகையில் காயம் ஏற்பட்டுள்ளது.

 நல்ல ஃபார்ம்

நல்ல ஃபார்ம்

நடப்பு தொடரில் மும்பை அணியின் தூணாக சூர்யகுமார் தான் இருந்தார் எனக்கூறலாம். 8 போட்டிகளில் 303 ரன்களை குவித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 145.67 மற்றும் சராசரி 43 ரன்களாக உள்ளன. இதில் 3 அரைசதங்கள் அடங்கும். தற்போது அவர் வெளியேறியிருப்பது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவு தான் எனக்கூற வேண்டும்.

அட்டகாச ப்ளான்

அட்டகாச ப்ளான்

ஐபிஎல் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்காவுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மோதுகிறது. இதில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதால், சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்கு ஃபார்மை நிரூபிக்க சரியான நேரம் ஆகும். எனவே நீண்ட ஓய்வு பெற்று அந்த தொடருக்கு தயாராகும் நோக்கில் தான் தற்போது ஐபிஎல்-ல் இருந்து வெளியேறி இருப்பதாக தெரிகிறது.

Story first published: Monday, May 9, 2022, 19:44 [IST]
Other articles published on May 9, 2022
English summary
Suryakumar yadav ruled out of ipl 2022 ( ஐபிஎல் தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல் ) ஐபிஎல் தொடரி இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் திடீரென விலகியுள்ளார். இதற்கான காரணத்தை பார்க்கலாம்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+