
மும்பை அணி மாற்றம்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ் ஒரே ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கினார். இதனால் அவருக்கு மாற்றாக சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. ஏனென்றால் டேனியல் சாம்ஸை போன்று அர்ஜுன் டெண்டுலரும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் நன்கு பேட்டிங் செய்யக்கூடியவர்.

ரோகித் பிடிவாதம்
ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அர்ஜுன் டெண்டுலருக்கு பதிலாக ராமந்தீப் சிங் என்ற இளம் ஆல்ரவுண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இது தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மும்பை அணியில் கடந்த சில சீசன்களாக வாய்ப்புக்காக காத்துள்ள அர்ஜுன் டெண்டுல்கருக்கு வேண்டுமென்றே ரோகித் சர்மா வாய்ப்பு தராமல் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

என்ன காரணம்
22 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் நன்கு சிறப்பாக பந்துவீசச்கூடியவர் தான். அவரின் திறமையை ஐபிஎல்-ல் பயன்படுத்தலாம். ஆனால் இந்தியாவின் முதல் தர போட்டியில் அவருக்கு பெரிய அனுபவம் கிடையாது. நேரடியாக ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவது தவறான முடிவாக அமையலாம். இதனால் தான் அவரை பற்றி ரோகித் மவுனம் காத்து வருவதாக தெரிகிறது.

நிர்வாகத்தின் உள்குத்து
மற்றொருபுறம், மும்பை அணி நிர்வாகமே தடுப்பதாகவும் தெரிகிறது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில் சச்சின் போன்ற ஜாம்பவான்களின் வாரிசுக்கு நேரடியாக வாய்ப்பு தந்துவிட்டது என்ற கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக சற்று காலம் வாய்ப்பு தராமல் உட்கார வைத்திருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











