ஒரே தோல்வியால் ஆடி போன கொல்கத்தா.. எதுமே சரியில்லனு ஸ்ரேயாஸ் விரக்தி.. தவறு நடந்தது எங்கே?
புனே: ஐபிஎல் தொடரில் லக்னோக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 101 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Recommended Video
இதன் மூலம் கொல்கத்தா அணியின் ரன் ரேட் அடி பாதளத்திற்கு சென்றது. இதனால் கொல்கத்தா அணியின் பிளே ஆப் வாய்ப்பு கடினமாகி உள்ளது.
இனி எஞ்சிய 3 போட்டியிலும் அந்த அணி வென்றால் கூட, மற்றவர்களின் உதவி இருந்தால் மட்டுமே பிளே ஆப் குறித்து நினைக்கவே முடியும்.

ஸ்ரேயாஸ் தவறு
சீசன் தொடக்கத்தில் திறமையான கேப்டனாக ரசிகர்கள் முன் தோன்றிய ஸ்ரேயாஸ்க்கு யார் சூனியம் வைத்தார்களோ தெரியவில்லை. அதன் பின்னர் தொடர்ந்து தப்பாகவே அவருக்கு நடக்கிறது. வெங்கடேஷ் ஐயரை தேவையில்லாமல் நடுவரிசைக்கு அனுப்பி அவருடைய நம்பிக்கையை குலைத்தது. இதனால் அவர் ஃபார்ம் அவுட்டாகி பிளேயிங் லெவனை விட்டே சென்றுவிட்டார்.

சௌதி விவகாரம்
நன்றாக பந்துவீசி வந்த சௌதியை தூக்கி, பாட் கம்மின்ஸ்க்கு வாய்ப்பு கொடுத்து, தற்போது அவர் சரியாக விளையாடவில்லை என்று மீண்டும் சௌதியை சேர்ப்பது என ஒரு காமெடி தர்பாரையே நடத்திவிட்டார் ஸ்ரேயாஸ் ஐயர். மேலும் உமேஷ் யாதவ் இல்லாததும் கேகேஆருக்கு பின்னடைவாக அமைந்தது.

கணிக்க முடியவில்லை
ஒரு கேப்டன் எப்போதுமே ஆடுகளத்தை கணிக்க வேண்டும். ஆடுகளத்தை கணிக்க முடியாமல் பிளேயிங் லெவனை தேர்வே செய்ய முடியாது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரோ, எனக்கு ஆடுகளத்தை சரியாக கணிக்க முடியவில்லை. இதனால் பேட்டிங் செய்வதா, பந்துவீசுவதா என்று குழம்பி இருந்தேன். என்னுடைய பயிற்சியாளரும் குழம்பிவிட்டார் என உண்மையை ஒப்பு கொண்டார்.

மெகா தவறு
இது போன்ற சிக்கலான சூழலில், அடிப்படை பேட்டிங்கை நோக்கி நகர வேண்டும். அதாவது பந்துகளை எதிர்கொண்டு சிங்கிள்ஸ் ஆடி, பின்னர் பந்துகளை அடித்து ஆட வேண்டும். தோல்வி உறுதி என தெரிந்தால், கண்டிப்பாக 20 ஓவர் வரை பேட்டிங் செய்து தோல்விக்கான இடைவெளியை குறைக்க வேண்டும். இதனை மற்ற வீரர்களுக்கும் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அடித்து ஆடுகிறேன் என்ற பெயரில் 15வது ஓவரில் 101 ரன்னில் சுருண்டது எல்லாம் மெகா தவறு. இந்த ஒரு போட்டியே கேகேஆரின் நடப்பு சீசனின் முடிவுரையை எழுதிவிட்டது.


Click it and Unblock the Notifications