Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை கேப்டன் பதவியிலிருந்து விலகும் ரோகித் சர்மா? தோனி, கோலியை தொடர்ந்து முடிவு? அவசர ஆலோசனை

மும்பை: ஐபிஎல் தொடரில் விராட் கோலி, தோனியை தொடர்ந்து ரோகித் சர்மாவும் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை படைத்தவர் ரோகித் சர்மா.

மும்பை அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்ற பிறகு தான், அந்த அணிக்கு விடிவு காலம் வந்தது. அவருடைய கேப்டன் திறமையையும் வெளிப்பட்டது.

ரோகித் முதலிடம்

ரோகித் முதலிடம்

இந்த நிலையில், விராட் கோலி, தோனி ஆகியோர் ஐபிஎல் தொடரின் கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டனர். இதனால் தற்போது ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் உள்ள கேப்டன் என்ற வரிசையில் ரோகித் சர்மா முதலிடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 2வது இடத்திலும் உள்ளனர். இந்த நிலையில், இந்திய அணியின் அனைத்து போட்டிகளுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2 உலககோப்பை தொடர்

2 உலககோப்பை தொடர்

ரோகித் சர்மாவுக்கும் வயது 34 ஆகிவிட்டது. ரோகித் தலைமையில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்றாலும் தனிப்பட்ட முறையில் அவரது பேட்டிங் ஃபார்ம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 18 மாதத்தில் 2 உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என பல முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது.

கடும் நெருக்கடி

கடும் நெருக்கடி

இதற்கு கேப்டனாக ரோகித் சர்மா செயல்படும் நிலையில், தற்போது ஐபிஎல் போன்ற தொடர்களில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்தால், அவருக்கு மேலும் நெருக்கடி ஏற்படும். இது அவரது பேட்டிங் பார்மை பாதிக்கப்படும் என்பதால் விராட் கோலி, தோனியை போல் தாமும் கேப்டன் பதவியை விட்டு விலகி விடலாம் என்ற யோசனையில் அவர் உள்ளார்.

ரோகித் முடிவு

ரோகித் முடிவு

இதே போன்று இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா உள்ள நிலையில், அவரையே மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பு வழங்கி அவருக்கு இந்த சீசனில் உதவலாம் என்ற முடிவில் ரோகித் உள்ளார். இதற்கு மும்பை அணி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால் தமது மன நிலையையும், பேட்டிங் பார்மையும் பொறுத்து ரோகித் நடப்பு சீசனிலேயே முக்கிய முடிவு எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Friday, March 25, 2022, 9:27 [IST]
Other articles published on Mar 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+