Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினை தட்டித்தூக்கவுள்ள மும்பை இந்தியன்ஸ்.. பெரும் தொகைக்கு ஏற்பாடு.. பின்னால் உள்ள முக்கிய காரணம்

பெங்களூரு: ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் தொகையை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கிவிட்டதால் ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கான தொகைகளை பிரித்து வருகின்றன.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் முக்கிய வீரர்களுக்காக பெரும் தொகைகளை செலவிட முடிவெடுத்துள்ளது.

மும்பை அணி வியூகம்

மும்பை அணி வியூகம்

தற்போதைக்கு அந்த அணி கேப்டன் ரோகித் சர்மா ரூ.16 கோடி, பும்ரா ரூ. 12 கோடி, சூர்யகுமார் யாதவ் ரூ. 8 கோடி, பொல்லார்ட் ரூ. 6 கோடி என அனைத்து துறைகளையும் கவர் செய்யும் விதமாக 4 வீரர்களை தன்வசம் வைத்துள்ளது. மீதமுள்ள ரூ.48 கோடியை வைத்து சுமார் 17 வீரர்கள் வரை சிறந்தவர்களாக தூக்க அந்த அணி திட்டமிட்டுள்ளது.

அஸ்வினுக்கு வலை

அஸ்வினுக்கு வலை

அந்தவகையில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலத்தில் எடுக்க மும்பை அணி குறிவைத்துள்ளது. கடந்த சீசன்களில் ராகுல் சஹார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் மும்பை அணியின் ஸ்பின்னர்களாக இருந்தனர். ஆனால் இந்த முறை ராகுல் சஹாரை மட்டும் எடுக்கவுள்ளது. அவருடன் சேர்த்து ஒரு அனுபவ ஸ்பின்னரையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

பெரும் தொகை

பெரும் தொகை

கடந்த 4 ஆண்டுகளாக இந்திய டி20 அணியில் இடம்பெறாமல் இருந்த அஸ்வின், சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை, தென்னாப்பிரிக்க தொடர் என தரமான கம்பேக் கொடுத்துள்ளார். எனவே அவரை ஏலத்தில் எடுக்க ரூ. 7 கோடி வரை செலவு செய்ய மும்பை அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கூடுதல் சிறப்பம்சம்

கூடுதல் சிறப்பம்சம்

ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் கொண்ட அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகளில் முக்கிய பணியாற்றியவர். அவருக்கு இரு அணி கேப்டன்களின் வியூகங்கள் நன்கு தெரியும் என்பதால் மும்பை அணியால் சுலபமாக சமாளிக்க முடியும். ஆனால் சமீபத்தில் பேட்டியளித்திருந்த அஸ்வின் மீண்டும் சிஎஸ்கேவுக்கு திரும்பினால் நன்றாக இருக்கும் என்பது போல கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 10, 2022, 18:41 [IST]
Other articles published on Feb 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+