அணி தாவிய முக்கிய வீரர்? பரிதாப நிலையில் பஞ்சாப் எடுத்த துணிச்சல் முடிவு.. தக்கவைக்கப்பட்ட வீரர்கள்?
சென்னை: பஞ்சாப் கிங்ஸ் அணியின் தக்கவைக்கப்போகும் வீரர்கள் பட்டியலில் பெரும் ஆச்சரியம் கொடுத்துள்ளது.
2022ம் ஆண்டுகான ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் அணி
அந்தவகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டுகாக முக்கிய முடிவை எடுத்துள்ளது.ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல் இருக்கும் 3 அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்று. கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்று இருந்த பெயரை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றி, கே.எல்.ராகுலை கேப்டனாக நியமித்தனர். எனினும் அந்த அணியின் தோல்வி முகம் மாறவே இல்லை. இதனால் கே.எல்.ராகுலை கழட்டிவிட்டுவிட்டு, வேறு கேப்டனை நியமிக்க அந்த அணி முடிவெடுத்துள்ளது. கே.எல்.ராகுலும் லக்னோ அணியின் கேப்டனாக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்?
கே.எல்.ராகுல் இல்லாததால், பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் தக்கவைப்பில் 2 பேரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளது. அதாவது அந்த அணியில் முக்கிய வீரராக இருந்து வரும் மயங்க் அகர்வால் முதன்மை தேர்வாக தக்கவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊதியமாக ரூ.12 கோடி மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அர்ஷ்தீப் சிங்
இவருக்கு அடுத்தபடியாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனில் மிகச்சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், பஞ்சாப் அணியின் முக்கிய பவுலராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அர்ஷ்தீப் சிங் இன்னும் சர்வதேச போட்டியில் அறிமுகமாகாமல் இருப்பதால் ரூ.4 கோடி மட்டுமே அவருக்கு ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பின் திட்டம்
பஞ்சாப் அணியில் பல்வேறு முக்கிய வீரர்கள் இருந்த போதும், நிறைய பணத்தை செலவிட அந்த அணியின் நிர்வாகம் தயாராக இல்லை. மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் ரூ.90 கோடி மட்டுமே செலவிட முடியும். இதனால் தற்போது வெறும் ரூ.18 கோடியை மட்டுமே செலவளிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு மீதம் ரூ. 72 கோடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications