For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அதுதான் எல்லாவற்றிற்கும் காரணம்” சீனியரை மறைமுகமாக சாடிய ரோகித் சர்மா.. மும்பை தோல்விக்கான காரணம்!

மும்பை அணி செய்யும் தவறுகள் என்னவென்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

ஏற்கனவே 4 தோல்விகளை பெற்றிருந்த மும்பை அணிக்கு நேற்று மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

கடின இலக்கு

கடின இலக்கு

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஓப்பனிங்கே அதிரடியாக அமைந்தது. கேப்டன் மயங்க் அகர்வால் 52 ரன்கள், ஷிகர் தவான் 70 ரன்கள் என குவித்தனர். இதன் பின்னர் வந்த ஜித்தேஷ் சர்மா 30 ரன்களும், ஷாருக்கான் 15 ரன்களும் விளாச 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து 5வது தோல்வி

தொடர்ந்து 5வது தோல்வி

199 என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் இஷான் கிஷான் 3 ரன்களுக்கு வெளியேறினார். மிடில் ஆர்டரில் டேவால்ட் பிரேவிஸ் 49 ரன்கள், திலக் வர்மா 36 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 43 ரன்கள் ஆகியோர் சிறப்பாக ஆடினர். எனினும் லோயர் ஆர்டரில் பொல்லார்ட் உள்ளிட்டோர் ஏமாற்றியதால் 20 ஓவர்களில் 186 ரன்களை மட்டும் தான் அடித்து தோல்வியை சந்தித்தது.

ரோகித்தின் விளக்கம்

ரோகித்தின் விளக்கம்

இந்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து ரோகித் விளக்கமளித்துள்ளார். அதில், அணியில் எந்தவொரு தவறையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அனைத்தையும் சரியாக தான் செய்தோம். வெற்றி பெறும் நேரத்தில் தேவையில்லாத 2 ரன் அவுட்கள் எங்களை பின்நோக்கி இழுத்துவிட்டது. பஞ்சாப் அணியின் பவுலிங் படை சிறப்பாக செயல்பட்டதுதான் காரணம்.

சூழ்நிலைகள்

சூழ்நிலைகள்

நாங்கள் ஒரு மன எண்ணத்தில் களமிறங்கினோம். ஆனால் முழுவதுமாக மாறி அமைந்தது. தவறுகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு சிறப்பான கம்பேக் கொடுப்போம். சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடினால் 199 என்பது சுலபமாக அடிக்கக்கூடிய இலக்கு தான். மாற்றிக்கொண்டு வருகிறோம் எனக்கூறினார்.

யார் தவறு செய்தது?

யார் தவறு செய்தது?

நேற்றைய போட்டியில் 20 பந்துகளில் 30 ரன்களை எடுத்து சிறப்பாக விளையாடிய திலக் வர்மா தேவையின்றி ரன் அவுட்டானார். இதே போல சீனியர் வீரர் கெயீரன் பொல்லார்ட் 2வது ரன் ஓடுவதற்காக ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

IPL 2022: Rohit Sharma Accepted That Mumbai Indians Have Played Very Badly | Oneindia Tamil
Story first published: Thursday, April 14, 2022, 16:40 [IST]
Other articles published on Apr 14, 2022
English summary
IPL 2022: Rohit sharma Explanation on Mumbai indians 5th loss against punjab kings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+