Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ரசிகர்கள் கவனத்திற்கு.. ரோகித் படைக்கப்போகும் பிரமாண்ட சாதனை.. 2வது இந்தியரே இவர்தானாம்!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று பிரமாண்ட சாதனை ஒன்றை படைக்க காத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியான இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் இன்று மதியம் 3 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது.

மும்பை அணி போட்டி

மும்பை அணி போட்டி

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணியாக வலம் வரும் மும்பை அணிக்கு இந்தாண்டு தொடக்கமும் பின்னடைவாகவே இருந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. இதனையடுத்து 2வது போட்டியிலாவது வெற்றி கணக்கை தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

ரோகித் சாதனை

ரோகித் சாதனை

இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பிரமாண்ட சாதனை படைக்கவுள்ளார். அதாவது டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து விராட் கோலி மட்டுமே இருந்து வருகிறார். ரோகித் சர்மா இன்னும் 64 ரன்களை அடித்தால் 2வது இந்தியராக பெருமை பெறுவார்.

ஐபிஎல் ஸ்பெஷல் சாதனை

ஐபிஎல் ஸ்பெஷல் சாதனை

இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் ஸ்பெஷல் சாதனைகளை படைக்கவுள்ளார். ரோகித் இன்னும் 5 பவுண்டரிகள் மட்டும் அடித்தால் ஐபிஎல்-ல் 500 பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் இணைவார். இதே போல மும்பை அணிக்காக 400 பவுண்டரிகளை அடிக்க இன்னும் ஒரே ஒரு பவுண்டரி தேவை.

Recommended Video

IPL 2022: Fit-again Suryakumar Yadav joins Mumbai Indians ahead of RR | Oneindia Tamil
ரோகித்தின் ஃபார்ம்

ரோகித்தின் ஃபார்ம்

ரோகித் சர்மா தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் 32 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸருடன் 41 ரன்களை விளாசினார். இதனால் இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடி ஹிட்மேன் என்பதை மீண்டும் நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 2, 2022, 16:34 [IST]
Other articles published on Apr 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+