
எப்படி தோற்றது
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வால், ஷிகர் தவானின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் விளையாடிய மும்பை அணி எதிர்பாராத விதமாக விக்கெட்களை பறிகொடுக்க 20 ஓவர்களில் 186 /9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5வது தோல்வியை பெற்றது.

புது பிரச்சினை
இந்நிலையில் வெந்த புண்ணில் உப்பைத்தடவும் விதமாக மும்பை அணிக்கு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது நேற்றைய போட்டியில் மும்பை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. இது நிரூபிக்கப்பட்டதால் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணி வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25% அபராதம் செலுத்த வேண்டும்.

2வது முறையாக தவறு
இந்த தொடரில் மும்பை அணியின் 2வது தவறு இதுவாகும். முதல் போட்டியிலேயே டெல்லிக்கு எதிராக இந்த தவறை செய்தது. இதற்காக ரோகித் சர்மாவுக்கு மட்டும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சூழலில் 2வது முறையாக தவறு செய்ததால் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது.

ரோகித் விளையாட தடை
ஐபிஎல் விதிமுறைப்படி 3வது முறையாக, பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டனர் என புகார் எழுந்தால் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும். மேலும் அவருக்கு ரூ.25 லட்சம் அபராதம் மற்றும் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications