Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் வெற்றியை விடுங்கப்பா.. ரோகித்தின் பிரமாண்ட சாதனையை எதிர்நோக்கி உள்ள ரசிகர்கள்.. 2வது இந்தியர்

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா படைக்கப்போகும் பிரமாண்ட சாதனையின் மீதுதான் ரசிகர்களின் கவனம் உள்ளது.

ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியான இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அமைப்பின் மைதானத்தில் இன்று இரவு நடைபெறவிருக்கிறது.

மும்பை அணி போட்டி

மும்பை அணி போட்டி

5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்தாண்டும் வழக்கம் போல பின்னடைவு ஏற்பட்டது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியிலாவது வெற்றி கணக்கை தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

ரோகித் சாதனை

ரோகித் சாதனை

இந்நிலையில், இன்று வெற்றியை விட ரோகித் சர்மாவின் சாதனை தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து விராட் கோலி மட்டுமே இருந்து வருகிறார். ரோகித் சர்மா இன்னும் 25 ரன்களை அடித்தால் 2வது இந்தியராக பெருமை பெறுவார்.

ரன் விவரம்

ரன் விவரம்

ரோகித் சர்மா தற்போது வரை 217 போட்டிகளில் விளையாடி 5,691 ரன்களை குவித்துள்ளனர். இதுவரை 1 சதம் மற்றும் 40 அரைசதங்களை ஐபிஎல் கிரிக்கெட்டில் விளாசியுள்ளார். இன்னும் 25 ரன்கள் அடித்தால், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் 7வது இடத்தை பிடிப்பார்.

Recommended Video

IPL 2022: Nita Ambani sends a message motivating Mumbai Indians | Oneindia T
கம்பேக் கொடுப்பாரா

கம்பேக் கொடுப்பாரா

கடந்த சில போட்டிகளில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா, இன்று சாதனையுடன் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவர் ஆடுவதை வைத்து தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் வெற்றி அமையப் போகிறது.

Story first published: Wednesday, April 13, 2022, 18:28 [IST]
Other articles published on Apr 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+