மும்பை ஹாட்ரிக் தோல்வி.. ரோகித் கேப்டன் பதவிக்கு நெருக்கடி. பதவி விலக வாய்ப்பு?
மும்பை: ஐபிஎல் தொடரின் 5முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை கோப்பை வென்ற அணி, அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது.
ஆனால், இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ளது. மும்பை எப்போதுமே இது போல் முதலில் தோல்வி அடைவது வாடிக்கை தான்.

அழுத்தம்
ஆனால், இருந்தாலும் ரோகித் சர்மாவுக்கு பேட்டிங் சொதப்பல் காரணமாக அணிக்குள்ளே நெருக்கடி இருப்பதாக தெரிகிறது. ரோகித் சர்மா தற்போது இந்திய அணிக்கு அனைத்து பிரிவிலும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதனால் அவருக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நெருக்கடிகள் அதிகம் உள்ள ஐபிஎல் தொடரிலும் ரோகித் கேப்டனாக தொடர்கிறார்.

பேட்டிங் சொதப்பல்
இதனால் விராட் கோலி, தோனி வரிசையில் ரோகித் சர்மாவும் கேப்டன் பதவியை விட்டு விலகுவார் என்று முன்பே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ரோகித் சர்மாவின் பேட்டிங் சொதப்பல் தான். ரோகித் விரைவில் ஆட்டமிழப்பதால், அந்த அணிக்கு தொடக்கம் சரி வர அமையவில்லை.

பதவி சுமை
நடப்பு சீசன் முதல் ஆட்டத்தில் 41 ரன்கள் அடித்தாலும், இரண்டாவது ஆட்டத்தில் 10 ரன்களும், 3வது ஆட்டத்தில் 3 ரன்களும் அடித்து ரோகித் சர்மா பேட்டிங்கில் சொதப்பினார். கேப்டன் பதவியால் ஏற்படும் சுமை காரணமாக, ரோகித் சர்மாவால் முன்பு போல் பேட்டிங்கில் விளையாட முடியவில்லை என்றும் ரசிகர்கள் குறை கூறுகின்றனர்.
Recommended Video

ரசிகர்கள் விமர்சனம்
ரோகித் சர்மாவுக்கு வயதும் 34 ஆகி விட்டதால், அவர் கேப்டன் பதவியை வேறு யாருக்கோ இல்லை இளம் வீரருக்கோ கொடுத்துவிட்டு சுதந்திரமாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ரோகித் பேட்டிங் பாதிக்கப்படுவதால் அவர் ஒரு சில போட்டியில் ஓய்வு எடுத்து கொண்டு, பின்னர் ஐபிஎல் தொடருக்கு திரும்பவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications