
ரோகித் ரிஸ்க்
மும்பை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது. எனினும் தொடர் தோல்விக்கு முற்றிப்புள்ளியாவது வைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்தவகையில் இன்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் அணி பல போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து தான் வெற்றி பெற்றுள்ளது. இது ஒரு ரிஸ்க்கான முடிவாக பார்க்கப்படுகிறது.

2 முக்கிய மாற்றங்கள்
இது ஒருபுறம் இருக்க 2 முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. அணியின் மிடில் ஆர்டரில் மிகவும் நம்பப்பட்ட பேபி டிவில்லியர்ஸ் டேவால்ட் ப்ரேவிஸ் நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானுக்கு எதிராக அதிரடி தான் தேவை. இதுபோன்ற சூழலில் அவரை கழட்டிவிட்டு, சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட்டை கொண்டு வந்துள்ளனர். முதல் சில போட்டிகளில் டிம் டேவிட் சொதப்பிய நிலையில் இன்று சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

புதிய வீரர் சேர்ப்பு
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் வேகப்பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்று வீரராக சுழற்பந்துவீச்சாளர் குமார் கார்த்திகேயா சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மாற்று வீரராக தற்போது தான் அணிக்குள் இணைக்கப்பட்டார். முதல் போட்டியிலேயே வாய்ப்பு தரப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

ப்ளேயிங் 11 மாற்றம்
மும்பை : இஷான் கிஷான், ரோகித் சர்மா, டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கெயீரன் பொல்லார்ட், ஹிர்திக் சோக்கீன், டேனியல் சாம்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்
ராஜஸ்தான் : ஜாஸ் பட்லர், தேவ்தத் பட்டிக்கல், சஞ்சு சாம்சன், டேர்லி மிட்செல், சிம்ரான் ஹெட்மெயர், ரியான் பராக், ரவி அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல், குல்தீப் சென்


Click it and Unblock the Notifications











