சச்சின் மகனுக்கு வாய்ப்பு..மும்பை அணியில் நடந்த அவசர மீட்டிங்.. நெருக்கடியில் ரோகித் எடுத்த முடிவு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இன்று அறிமுகமாவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் உள்ளது.

ரோகித்துக்கு தலைவலி
5 முறை சாம்பியனான மும்பைக்கு இந்தாண்டு சரியான ப்ளேயிங் 11 அமையவில்லை. ஒருமுறை பேட்டிங்கில் சொதப்பினால், மற்றொரு போட்டியில் பவுலிங்கில் சொதப்பி விடுகின்றனர். இதன் காரணமாக இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை. எனவே இன்று பலமான லக்னோ அணியை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ரோகித்தின் முடிவு
இந்நிலையில் அதற்காக ரோகித் சர்மா அதிரடி முடிவு ஒன்றை கையில் எடுத்துள்ளார். அதாவது நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்திருக்கும் அர்ஜுன் டெண்டுல்கரை களமிறக்கவுள்ளார். இவர் சச்சினை போன்று பேட்ஸ்மேன் கிடையாது, இடது கை வேகப்பந்துவீச்சாளராகும். எனவே அணியின் டெத் ஓவர் பிரச்சினைக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாகீர் கான் தயாரிப்பு
அர்ஜுன் டெண்டுல்கர் முழு முழுக்க ஜாகீர் கானின் மேற்பார்வையில் தயாரானவர். கடந்தாண்டே மும்பை அணியில் விளையாடவிருந்த அர்ஜுன், காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அதன் பின்னர் சையது முஷ்டக் அலி, ரஞ்சிக்கோப்பை தொடர்களில் ஓரளவிற்கு பங்கேற்று விளையாடி தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.

பிடிவாதமான முடிவு
உள்நாட்டு தொடர்களில் பெரியளவில் அனுபவம் இல்லாததால், அர்ஜுனுக்கு ரோகித் சர்மா வாய்ப்பு கொடுக்காமலேயே உள்ளார். நெருக்கடியான சூழல்கள் வந்த போதும், அவரை அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் தற்போது வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளார்.

ட்ரெண்ட் போல்ட்-ன் இடம்
கடந்த சீசன்களில் மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுடன் ட்ரெண்ட் போல்ட் இருந்தார். அவரை மெகா ஏலத்தில் விட்டுக்கொடுத்த மும்பை அணி, ஜோஃப்ரா ஆர்ச்சரை வாங்கியது. அவரோ காயம் காரணமாக வெளியேறிவிட்டார். எனவே பும்ராவுக்கு பக்கபலமாய் அர்ஜுன் டெண்டுல்கர் அமைவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications