தொடர்ந்து 4வது வெற்றி.. துள்ளி குதித்த காவ்யா மாறன்.. பஞ்சாப் அணி ஏமாற்றம்
மும்பை: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி தொடர்ந்து 4வது வெற்றியை பெற்றுள்ளது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
கேப்டனாக களமிறங்கிய ஷிகர் தவான், இன்று பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
மாயங் அகர்வால் காயம் காரணமாக விலகியதால், சிம்ரன்சிங் தொடக்க வீரராக களமிறங்கினார்.

26 பந்தில் 50
போட்டி தொடங்கியதும், முதல் ஓவரில் புவனேஸ்வர் குமார் ஒரு பவுண்டரி உள்பட 6 ரன்களை விட்டு கொடுத்தார். இதனை தொடர்ந்து யான்சென் கட்டுகோப்பாக பந்துவீசி 2வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அவர் விட்டு கொடுத்தார். ஆனால் அடுத்த ஓவரிலே புவனேஸ்வர் குமார் ஷிகர் தவான் விக்கெட்டை சாய்த்தார். லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. குறிப்பாக லிவிங்ஸ்டோன் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

தடுமாற்றம்
பாரிஸ்டோ 12 ரன்களில் ஆட்டமிழக்க, லிவிங்ஸ்டோன் 33 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஜித்தேஷ் சர்மா, ஷாரூக்கான் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் 4 விக்கெட் வீழ்ந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நல்ல தொடக்கம்
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில் வில்லியம்சன் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடிய 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அதிரடி வீரர் ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து 4வது வெற்றி
தென்னாப்பிரிக்க வீரர் ஏய்டன் மார்க்ரம் தனது பழைய ஃபார்மை இழக்காமல் 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரான் 35 ரன்கள் எடுக்க, ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 152 ரன்களுக்கு 3 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது. இதன் மூலம் 4வது வெற்றியை பெற்றுள்ள ஐதராபாத் அணி, புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications