Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்பா சாமி.. 157 கி.மீ. வேகத்தில் பவுலிங்.. காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்.. தப்பும் நடக்குது

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் அதிவேக பந்தை வீசியவர் என்ற பெருமையை காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் பெற்றுள்ளார்.

Recommended Video

IPL 2022 - Sanga's Cricket Wrap | Hardik Pandya Explain | Livingston's 117m Six | Mumbai Indians Fun

மும்பை பார்போர்ன் மைதானத்தில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் உம்ரான் மாலிக், எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்தை வீசினார்.

குறிப்பாக ஐதராபாத் அணியின் 20வது ஓவரை உம்ரான் மாலிக் விசினார். இதில் அவர் வீசிய அனைத்து பந்தும் 150 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டியது.

IPL 2022 – SRH Bowler Umran Malik Delivers Fastest delivery of the tournament

153 கிலோ மீட்டர் வேகம், 154 கிலோ மீட்டர் வேகம், 155 கிலோ மீட்டர் வேகம், 157 கிலோ மீட்டர் வேகம், 156 கிலோ மீட்டர் வேகம்.. இவை அனைத்தும் 20வது ஓவரில் உம்ரான் மாலிக், வீசிய பந்தின் வேகம். இதன் மூலம் நடப்பு சீசனில் அதிவேக பந்தை வீசிய பெகுர்சனின் சாதனையை உம்ரான் மாலிக் முறியடித்தார். ஆனால் இந்த ஓவரில் 19 ரன்களை விட்டு கொடுத்தார்.

உம்ரான் மாலிக் நடப்பு சீசனில் சிறப்பாக பந்துவீசினாலும், கடைசியாக 2 போட்டியில் அவரது பந்தை அடிக்கும் டெக்னிக்கை பேட்ஸ்மேன்கள் கண்டுபிடித்துவிட்டனர். குஜராத்துக்கு எதிராக 5 விக்கெட்டை வீழ்த்திய பிறகு, அவருக்கு சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் சரிவை சந்தித்தார். 4 ஓவர் வீசி 48 ரன்கள் விட்டு கொடுத்தார்.

இதே போன்று இன்றைய ஆட்டத்திலும், உம்ரான் மாலிக் 4 ஓவரில் 52 ரன்கள் விட்டு கொடுத்தார். கிரிக்கெட்டை பொறுத்தவரை வேகம் ஒரு இரட்டை துப்பாக்கி போல், அது சரியாக பயன்படுத்தினால் தான் அது நன்மையை தரும், இல்லையேனில் அது நம்மையே சுட்டு விடும். உம்ரான் மாலின் லைனும், லெங்த்தும் சரியாக இருந்தால் தான், அந்த வேகத்துக்கு மரியாதை.

Story first published: Thursday, May 5, 2022, 22:30 [IST]
Other articles published on May 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+