Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உம்ரான் மாலிக்கை பத்திரமா பார்த்துக்கோங்க.. பிசிசிஐக்கு ஸ்டெயின் விடுத்த எச்சரிக்கை..என்ன நடந்தது?

மும்பை: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடும் உம்ரான் மாலிக் நிச்சயம் ஒருநாள் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று பயிற்சியாளர் ஸ்டேயின் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் இந்திய விரர்கள் 140 வேகத்தை தொட்டாலே அது தலைப்பு செய்தியாகிவிடும். ஆனால் இன்று சர்வ சாதாரணமாக அனைத்து வீரர்களும் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்றனர்,

ஜாகிர் கான், இஷாந்த் சர்மா இல்லை என்றால் அவ்வளவு தான் என்ற நிலை மாறி, தற்போது பும்ராவுக்கு ஓய்வு வழங்கி இந்தியா வெற்றி பெறும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

ஐபிஎல் புரட்சி

ஐபிஎல் புரட்சி

இது குறித்து பேசிய ஐதராபாத் அணியின் வேகப்பந்து பயிற்சியாளரான ஸ்டேயின், ஐபிஎல் மூலம் இந்திய வேகப்பந்துவீச்சு துறையில் ஒரு புரட்சியே வந்துள்ளதாக ஸ்டேயின் கூறினார். பும்ரா, உம்ரான் மாலிக், நடராஜன், புவனேஸ்வர் குமார் போன்ற விதவிதமான வீரர்கள் இன்று கலக்குவதற்கு காரணம் ஐபிஎல் தான் என்று ஸ்டேயின் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐக்கு அறிவுரை

பிசிசிஐக்கு அறிவுரை

உலக கிரிக்கெட்டிலேயே தற்போது அதிவேகமாக பந்துவீசக் கூடிய நபர் என்றால் உம்ரான் மாலிக்கும், பெகுர்சனும் தான். உம்ரான் மாலிக் இளம் வயதிலேயே நன்கு வேகமாக வீசுகிறார். அவர் நிச்சயம் இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் விளையாடுவார். ஆனால் அவரை பத்திரமாக பிசிசிஐ பார்த்து கொள்ள வேண்டும்.

சீனியர்கள் உதவி

சீனியர்கள் உதவி

உம்ரான் மாலிக்கிற்கு அதீத அழுத்தம், பனிச்சுமை தரக்கூடாது. உம்ரான் மாலிக் வேகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நான் கற்று தருகிறேன், ஐதராபாத் அணியின் சீனியர் வீரர்களான புவனேஸ்வர் குமார், நட்ராஜன் ஆகியோர் உம்ரான் மாலிக்கிற்கு சிறிய சிறிய யுத்திகளை கற்று தருகிறார்கள. இதில் என்ன ஆச்சரியம் என்றால் உம்ரான் மாலிக் வேகமாக கற்று கொள்கிறார்.

இது ஸ்டெயின் பாடம்

இது ஸ்டெயின் பாடம்

உம்ரான் மாலிக்கிடம் நான் சொல்வது எல்லாம் ஒன்றே ஒன்று தான். அவர் நன்றாக பந்துவீசும் போது தட்டி கொடுத்து ஊக்கம் அளிப்பேன். தவறு செய்தால் அதிலிருந்து கற்று கொண்டு முன்னோக்கி செல்ல கூறுவேன். மேலும் பந்துவீசும் போது பேட்ஸ்மேனால் அழுத்தம் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்க ஒரு பந்துவீச வேண்டும். அந்த பந்தை எப்படி வீசுவது என்று கற்று கொள் என்று கூறுவேன்.

Story first published: Friday, April 29, 2022, 17:46 [IST]
Other articles published on Apr 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+