Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராக்கி பாய்க்கு டஃப் தரும் உம்ரான் மாலிக்.. எதுவுமே போதாது.. திருப்தியே இல்ல.. என்ன காரணம்

மும்பை: ஐபிஎல் தொடரில் தனது வேகப்பந்துவீச்சு மூலம் ஐதராபாத் அணியின் உம்ரான் மாலிக் அனைவரையும் மிரட்டுகிறார்.

இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் அணியுடன், ஐதராபாத் மோதுகிறது. நடப்பு சீசனில் அதிவேகமாக பந்துவீசும் நபர் என்ற பெருமையை உம்ரான் மாலிக் தொடர்ந்து பெற்று வந்தார்.

தற்போது அதனை லோக்கி பெகுர்சன் முறியடித்துவிட்டார். முதல் 5 அதிவேக டெலிவரியில் பெகுர்சன் 2 இடங்களிலும், உம்ரான் மாலிக் 3 இடத்திலும் உள்ளனர்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இந்த நிலையில், கேஜிஎஃப் படத்தில் எப்படி ராக்கி பாயிடம் உனக்கு என்னடா வேண்டும் என கேட்டதற்கு, இந்த உலகம் என்று சொல்வாரோ, அதே போல் தற்போது உம்ரான் மாலிக் அளித்துள்ள பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடப்பு சீசனில் முதல் 2 இடங்களை தோற்ற ஐதராபாத் அணி, பிறகு தொடர்ந்து 5 போட்டியில் வென்றது.

திருப்தி இல்லை

திருப்தி இல்லை

இதன் மூலம், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிடும். இது குறித்து பேசிய உம்ரான், நாங்கள் ஒரு அணியாக நல்ல மனநிலையில் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு இன்னும் திருப்தி அடையவில்லை இந்த வெற்றி போதாது.

வெற்றி மட்டுமே

வெற்றி மட்டுமே

இந்த தொடரை வெல்ல வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். எனது பந்துவீச்சிலும் எனக்கு திருப்தி இல்லை. இது போதவே போதாது. நான் இன்னும் நன்றாக பந்துவீச வேண்டும். அதிக விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். அணியின் வெற்றிக்கு பங்களிப்பை தர வேண்டும் என்று உம்ரான் மாலிக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

உம்ரான் மாலிக்கின் இந்த உத்வேகம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. உம்ரான் மாலிக் நெருப்பு போல் இருப்பதாக பாராட்டிய ரசிகர்கள், இது போன்ற பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு தேவை என்று வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு சீசனில் உம்ரான் மாலிக் 7 போட்டியில் விளையாடி 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Story first published: Wednesday, April 27, 2022, 13:15 [IST]
Other articles published on Apr 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+