ஐபிஎல்லில் ஒரு காஷ்மீர் ஃபைல்ஸ்- உம்ரான் மாலிக்கின் தெறிக்கும் வேகம் இந்திய அணியின் எதிர்காலம்
மும்பை: ஐபிஎல் தொடரில் காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் கலக்கி வருகிறார். கடந்த சீசன் இறுதியிலேயே தனக்கு என ஒரு முத்திரை பதித்தார்.
Recommended Video
ஆனால், அவருக்கு முழுமையான வாய்ப்பு கடந்த சீசனில் கிடைக்கவில்லை. இருப்பினும் அவரது திறமையை அறிந்த ஐதராபாத் அணி, அவரை ஏலத்திற்கு முன்பே தக்க வைத்து கொண்டது.
ஐதராபாத் அணி தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை தற்போது காஷ்மீரை சேர்ந்த இளம் புயல் காப்பாற்றி உள்ளது.

21 ரன்கள்
டாஸ் வென்று முதலில் பந்துவீசிய ஐதராபாத் அணியில் உம்ரைன் மாலிக் 4வது ஓவரை வீசினார். அதில் உம்ரான் மாலிக் வேகமாக வீசினாலும், ரன் அடிப்பதற்கு ஏதுவான வழி இருந்தது. குறிப்பாக ஷாட் பால்களை புல் ஷாட் ஆடி ராஜஸ்தான் வீரர்கள் ரன் குவிக்க, அந்த ஓவரில் உம்ரான் மாலிக் 21 ரன்களை லிட்டு கொடுத்தார்.

திணறல்
நல்ல வேகப்பந்துவீச்சாளருக்கு எடுத்துக்காட்டே, செய்த தவறை உடனடியாக திருத்தி கொண்டு பேட்ஸ்மேனின் பலத்திற்கு எதிராக யுத்திகளை வகுத்து பந்துவீசுவது தான். வேகமாக பந்துவீசுவது தான் உம்ரான் மாலிக்கின் பலமே இதனால் அனல் பறக்க உம்ரான் மாலிக் பந்துவீசஅதனை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

150 கி.மீ வேகம்
அடுத்த 3 ஓவரில் உம்ரான் மாலிக் 18 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நேற்றைய ஆட்டத்தில் உம்ரான் மாலிக் தான் அதிகபட்ச வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார். அவருடைய வேகம் நியூசிலாந்து வேகம் பௌல்டையும் மிஞ்சியது. அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வேகத்திலும், அதற்கு அடுத்ததாக 149 புள்ளி 8 கிலோ மீட்டர் வேகத்திலும் உம்ரான் முதல் 5 இடத்தையும் பிடித்து அசத்திவிட்டார்.

பாராட்டு
உம்ரான் மாலிக்கின் வேகம் பிரமிக்க வைக்கும் வகையில் இருப்பதாக கேப்டன் வில்லியம்சன் பாராட்டினார். உம்ரான் மாலிக் இந்திய அணியின் எதிர்காலம் என்று பாராட்டிய ரவி சாஸ்த்ரி, அவரை சரியான முறையில் வழிகாட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தியா ஏ, இந்திய அணி வீரர்களுடன் உம்ரான் மாலிக்கை பயிற்சி செய்ய அனுமதித்து அவருக்கு அனுபவத்தை தர வேண்டும் என்று ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications