Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எஸ்ஆர்ஹச் வீரருக்கு கிடைத்த கௌரவம்.. புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரான் தேர்வு.. சரியான முடிவு தான்

பார்பிடாஸ்: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய நிக்கோலஸ் பூரானுக்கு புதிய கௌரவம் கிடைத்துள்ளது.

பூரான் கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய போது 9 போட்டியில் 64 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இதில் 6 முறை டக் அவுட் ஆனார்.

ஆனால், அதே பூரான் இம்முறை 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளார். தற்போது 9 போட்டியில் 180 ரன்கள் எடுத்துள்ளார்.

தற்காலிக கேப்டன்

தற்காலிக கேப்டன்

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள், டி20 போட்டியிலிருந்து பொலார்ட் ஓய்வு பெற்றார். இந்த நிலையில, அந்த பொறுப்புக்கு நிக்கோலஸ் பூரான் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது நிக்கோலஸ் பூரான் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார்.

புதிய கேப்டன் நியமனம்

புதிய கேப்டன் நியமனம்

இதில் வெஸ்ட் இண்டீஸ் 4க்கு1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதுவரை 8 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டியில் நிக்கோலஸ் பூரான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கேப்டனாக இருந்துள்ளார். இந்த நிலையில், புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பூரான், பல ஜாம்பவான்கள் வெஸ்ட் இண்டீஸ்க்கு அணியை வழிநடத்தி, புதிய பாதையை உருவாக்கியுள்ளனர்.

வெற்றி பாதை

வெற்றி பாதை

அந்த பாதையில் நானும் பயணிக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். கேப்டனாக நியமிக்கப்பட்டது, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஹைலைட்டான விஷயம். கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியை பல வெற்றிக்கும், முன்னேற்ற பாதைக்கும் அழைத்து செல்ல பாடுபடுவேன்,. கேப்டனாக கூடுதலாக உழைக்க வேண்டும். புதிய பொறுப்புகள் எனக்கு வந்துள்ளது.

3300 ரன்கள்

3300 ரன்கள்

இதுவரை வெஸ்ட் இண்டிஸ் அணிக்காக ஓட்டுமொத்தமாக 94 போட்டியில் 3300 ரன்கள் விளாசியுள்ளார். கடந்த ஆண்டு டி20 போட்டியில் பூரான் கிட்டதட்ட 500 ரன்கள் அடித்திருந்தார். நடப்பாண்டில் சர்வதேச டி20யில் 348 ரன்கள் விளாசியுள்ளார். நிக்கோஸ் பூரான் கேப்டனாக தனது முதல் பணியாக இம்மாத இறுதியில் நெதர்லாந்துடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்.

Story first published: Wednesday, May 4, 2022, 16:52 [IST]
Other articles published on May 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+