Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

படு குஷியில் மும்பை இந்தியன்ஸ்.. ரோகித்தின் அடுத்த திட்டம் என்ன தெரியுமா? தோல்வியை சரிகட்ட நடவடிக்கை

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று நிர்வாகம் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணி என்ற பெருமையை வைத்துள்ள மும்பை அணிக்கு இந்தாண்டு தொடக்கமே சிக்கல் தான்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

தொடக்கமே பின்னடைவு

தொடக்கமே பின்னடைவு

கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா 41 (32), இஷான் கிஷான், 81 (48) ரன்களை விளாசினர். ஆனால் இதனை தொடர்ந்து எடுத்து செல்ல மிடில் ஆர்டர் சொதப்பி விட்டது. அன்மோல் ப்ரீத் சிங் 8 ரன்கள், திலக் வர்மா 22, பொல்லார்ட் 3, டிம் டேவிட் 12 என ஒருவர் கூட சோபிக்கவில்லை. இதனால் 200 ரன்களுக்கு மேல் செல்ல வேண்டிய ஸ்கோர் 177 ரன்களுடன் நின்றது.

மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

இந்நிலையில் தனது வெற்றி கணக்கை தொடங்க மும்பை அணிக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அணியின் மிடில் ஆர்டர் தூணான சூர்யகுமார் யாதவ் பயிற்சியை தொடங்கிவிட்டார். கையில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சைப்பெற்று வந்த சூர்யகுமார், தாமதாக தான் அணிக்குள் இணைந்தார். தற்போது குவாரண்டைனை முடித்துள்ளார்.

நீக்கப்படும் வீரர் யார்

நீக்கப்படும் வீரர் யார்

முதல் போட்டியில் 8 ரன்களுக்கு அவுட்டான அன்மோல் ப்ரீத் சிங்கை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படுவார் எனத்தெரிகிறது. இதே போல சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட்டிற்கு கடந்த போட்டியில் 6வது வீரராக விளையாட தான் வாய்ப்பு கிடைத்தது. எனவே அடுத்த போட்டியில் டாப் ஆர்டரில் களமிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

Recommended Video

IPL 2022: Suresh Raina Makes His IPL 2022 Playoffs’ Predictions | Oneindia Tamil
பவுலிங்கிலும் மாற்றம்

பவுலிங்கிலும் மாற்றம்

பந்துவீச்சிலும் முக்கிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் டேனியல் சாம்ஸ் 4 ஓவர்கள் வீசி 57 ரன்களை வாரி வழங்கினார். ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. எனவே அவருக்கு மாற்றாக ஃபெபியன் ஆலனை கொண்டு வர அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, March 31, 2022, 13:33 [IST]
Other articles published on Mar 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+