
மும்பை மாற்றங்கள்
மும்பை அணியில் முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ் முழு உடற்தகுதி பெற்று திரும்பியதால், இன்றைய போட்டியில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அன்மோல்ப்ரீத் சிங் வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

என்ன காரணம்
உடற்தகுதி பெற்றிருந்தாலும், உடனடியாக போட்டிக்கு வந்தால், தடுமாற்றமாக இருக்கும் என்றும், முதல் போட்டியை பார்த்துவிட்டு, அதன்பின்னர் அவரை களமிறக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.இதனால் பழைய ப்ளேயிங் 11 உடனே களமிறங்கியுள்ளனர்.

மும்பை ப்ளேயிங் 11
ரோகித் சர்மா, இஷான் கிஷான், அன்மோல் ப்ரீத் சிங், திலக் வர்மா, கெயீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தாம்பி

ராஜஸ்தான் அணியில் மாற்றம்
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தது. கோல்டர் நைலுக்கு மட்டும் காயம் ஏற்பட்டதால் நவ்தீப் சைனியை கொண்டு வந்துள்ளனர். பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், பட்லர், பட்டிக்கல், ஹெட்மெயர் என அதிரடி வீரர்களும் பவுலிங்கில் பிரஷித் கிருஷ்ணா, ட்ரெண்ட் போல்ட், அஸ்வின் எனவும் ப்ளேயிங் 11 கலைக்கட்டுகிறது.
Recommended Video

ராஜஸ்தான் ப்ளேயிங் 11
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், தேவ்தத் பட்டிக்கல், சிம்ரான் ஹெட்மெயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல், ட்ரெண்ட் போல்ட், நவ்தீப் சைனி, பிரஷித் கிருஷ்ணா


Click it and Unblock the Notifications











