மாயந்தி முதல் நஷ்ப்ரீத் வரை.. ஐபிஎல் தொடரில் கலக்கப்போகும் டாப் 5 அழகிகள்.. ஒருவர் மட்டும் இல்லை!!
மும்பை: ஐபிஎல் தொடரின் போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அழகிகளின் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இந்த முறை 10 அணிகள், 2 மாதங்கள் என புது புது சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன.
ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து எப்போதும் ரசிகர்களை கவரும் ஒரு விஷயம் சியர் லீடர்ஸ் தான். ஆனால் அது தடை செய்யப்பட்டதில் இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மீது தான் ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது.

மாயந்தி
அந்த வகையில் இந்தாண்டுக்கான பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்படுபவர் மாயந்தி லங்கர். ஐபிஎல் ரசிகர்களை தன் வசம் ஈர்த்த மாயந்தி தனது முதல் குழந்தை பிறப்புக்காக கடந்த சீசனில் பங்கேற்கவில்லை. இந்தாண்டு பணிக்கு திரும்புவாரா என்பது இன்னும் சந்தேகத்துடன் உள்ளது.

சஞ்சனா
மாயந்தியின் இடத்தை சஞ்சனா கணேஷன் பூர்த்தி செய்து வருகிறார். இந்தியாவின் முன்னணி தொகுப்பாளினியாக உள்ள சஞ்சனா, கடந்த சீசனில் தனி கவனம் ஈர்த்தார். இவர் தற்போது ஐசிசி மகளிர் உலகக்கோப்பையில் பணியாற்றி வருகிறார். அதனை முடித்தவுடன் ஐபிஎல்-க்கு திரும்புகிறார். இவர் மும்பை அணி வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

தன்யா
உத்தர்காண்ட் மாநிலத்தை சேர்ந்த புதுமுக தொகுப்பாளர் தான் தன்யா. மாஸ் கம்யூனிக்கேஷன் பட்டம் பெற்றுள்ள அவர், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான NH - 10 திரைப்படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். தர்போது இவர் பல கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கி, ஐபிஎல் தொடரிலும் இடம்பெற்றுள்ளார்.

நஷ்ப்ரீத்
இந்தியாவை பூர்விகமாக கொண்ட நஷ்ப்ரீத் கவூர், ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். கிரிக்கெட்டில் அதிக அனுபவம் கொண்டவர். கடந்த ஐபிஎல் சீசனின் போது ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை இவர் தான் தொகுத்து வழங்கினார். கொரோனா காலத்தில் அமீரகத்தில் இருந்து அவர் செய்த பணிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

நெரோலி
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நெரோலி பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது கால்பந்து, கூடைப்பந்து என பல சர்வதேச போட்டிகளை தொகுத்து வழங்கி வருகிறார். விளையாட்டு துறையில் இவருக்கான மதிப்பு இந்தாண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் பணிபுரிந்த நெரோலிக்கு இந்த சீசனிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications