Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் எதிர்கால ஹீரோ.. குஜராத்தை கதறவிட்ட உம்ரான் மாலிக்..ஸ்டெயின் தந்த சிம்பிள் ரியாக்‌ஷன்

மும்பை: இந்திய அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டராக ஐதராபாத் அணி வீரர் உம்ரான் மாலிக் உருவெடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி அசத்தியது.

 கடினமான இலக்கு

கடினமான இலக்கு

தொடக்க வீரரும் கேப்டனுமான கேன் வில்லியம்சன் 5 ரன்களுக்கும், சீனியர் வீரர் ராகுல் திரிபாதி 16 ரன்களுக்கும் வெளியேறினர். எனினும் பொறுப்புடன் விளையாடிய அபிஷேக் சர்மா - எய்டன் மர்க்ரம் ஜோடி அணியை தூக்கி நிறுத்தினர். அபிஷேக் சர்மா 65 ரன்களும், மர்க்ரம் 56 ரன்களும் அடித்தனர். இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்களை குவித்தது.

சிறப்பான ஓப்பனிங்

சிறப்பான ஓப்பனிங்

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியை வாயைப்பிளக்க செய்தார் உம்ரான் மாலிக். விருதிமான் சாஹா - சுப்மன் கில் ஜோடி பவர் ப்ளேவில் அடித்து நொறுக்கியது. முதல் விக்கெட்டிற்கு 69 ரன்களை சேர்த்து அச்சுறுத்தினர். அப்போது வந்த உம்ரான் மாலிக் சுப்மன் கில்லை 22 ரன்களுக்கு வெளியேற்றி திருப்புமுணை கொடுத்தார்.

 வெளியேறிய பாண்ட்யா

வெளியேறிய பாண்ட்யா

இதன் பிறகு முழு ஃபார்மில் வந்த ஹர்திக் பாண்ட்யாவையும் அலறவிட்டார். பாண்ட்யா அடித்து ஆடுவார் என்பதை நன்கு அறிந்த உம்ரான், ஷார்ட் பாலாக வீச, அது அழகான கேட்ச்சாக மாறியது. இதுமட்டுமல்லாமல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த விருதிமான் சாஹாவுக்கும் உம்ரான் தான் முடிவு கட்டினார். ஆனால் இதுதான் தரமான விக்கெட்.

இப்படி ஒரு யார்க்கரா?

இப்படி ஒரு யார்க்கரா?

38 பந்துகளில் 68 ரன்களை அடித்து செட்டில் பேட்ஸ்மேனாக சாஹா இருந்தார். ஆனால் அவரின் பாட்ஷா உம்ரானிடம் பழிக்கவில்லை. 153 கிமீ வேகத்தில் வீசிய யார்க்கரை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்டம்புகள் பறக்க சாஹா அவுட்டாகி வெளியேறினார். இதோடு நின்றுவிட்டது என்று பார்த்தால் டேவிட் மில்லருக்கும் யார்க்கர் தான் வில்லனாக மாறியது.

Recommended Video

SRH vs GT போட்டியில் Gujarat Titans-ஐ மிரள விட்ட Umran Malik
அடுத்தடுத்து விக்கெட்கள்

அடுத்தடுத்து விக்கெட்கள்

ஆட்டத்தின் 16வது ஓவரில் உம்ரான் மாலிக் வீசிய பந்தில் எப்படி அடிப்பது என்று தெரியாமல் திகைத்த மில்லர் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்திலேயே அபினவ் மனோகரும் ஸ்டம்ப் அவுட்டாக குஜராத் அணி, ஒரு பவுலரிடம் 5 விக்கெட்களை பறிகொடுத்து பரிதாபமாக நின்றது.

Story first published: Thursday, April 28, 2022, 10:17 [IST]
Other articles published on Apr 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+