Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் நான்கே போட்டிகள்.. ஐபிஎல் ப்ளே ஆஃப் செல்லும் அணிகளை தீர்மானிக்கும் வாரம்.. எப்படி தெரியுமா??

மும்பை: ஐபிஎல் தொடரின் இந்த வார இறுதி போட்டிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகளை தீர்மானிக்கவுள்ளது.

Recommended Video

IPL 2022 Playoff செல்லும் Teams யார்? இது Important Weekend | OneIndia Tamil

ஐபிஎல் 15வது சீசன் தொடரில் 50 லீக் போட்டிகளுக்கு மேல் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் வெளியேறிவிட்ட நிலையில் மீதமுள்ள இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறாது.

புள்ளிப்பட்டியல் நிலவரம்

புள்ளிப்பட்டியல் நிலவரம்

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுவிட்டது. எனவே தற்போதைக்கு மீதமுள்ள 3 இடங்களில் லக்னோ , ராஜஸ்தான், ஆர்சிபி அணிகள் தக்கவைத்து வருகின்றன. எனினும் டெல்லி, பஞ்சாப், ஐதராபாத், கொல்கத்தா என 4 அணிகளும், அந்த 4வது இடத்திற்கு கடுமையாக போராடி வருகின்றன.

முக்கிய வாரம்

முக்கிய வாரம்

இந்நிலையில் இந்த வார இறுதி நாட்கள், அதை தீர்மானிக்கின்றன. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

பஞ்சாப் vs ராஜஸ்தான் 3.30PM - ஒருவேளை இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைந்துவிட்டால், தொடரில் இருந்து வெளியேறிவிடும். ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுவிடும்.

லக்னோ vs கொல்கத்தா 7.30 PM : இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோற்றுவிட்டாலும் ஐபிஎல் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிடும். அதே சமயம் லக்னோ அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு நெருங்கிவிடும்.

ஞாயிறு போட்டிகள்

ஞாயிறு போட்டிகள்

ஐதராபாத் vs ஆர்சிபி 3.30PM : இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுவிட்டால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளும். ஒருவேளை ஐதராபாத் வென்றுவிட்டால் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் தகுதிகள் நடைபெறுவது உறுதியாகிவிடும்.

டெல்லி நுழையுமா

டெல்லி நுழையுமா

சிஎஸ்கே vs டெல்லி : சென்னை அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. எனினும் டெல்லி அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை சிஎஸ்கே கெடுக்கலாம். டெல்லி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் பெற்றுள்ளது. எனவே சிஎஸ்கேவுடனும் தோற்றுவிட்டால், மீதமுள்ள 3 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு. அதுவும் அதிக ரன்ரேட்டுடன் இருக்க வேண்டும்.

Story first published: Saturday, May 7, 2022, 18:08 [IST]
Other articles published on May 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+