ரோகித்தே இதை செய்யலாமா??.. மும்பை அணியில் நடக்கும் பெரும் தவறு.. வெளிப்படையாக உடைத்த சேவாக்!!
மும்பை இந்தியன்ஸ் அணியில் நடக்கும் தவறுகளை முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் வெளிப்படையாக உடைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
அனைத்து அணிகளும் வெற்றிகளை பெற்றுவிட்ட நிலையில் மும்பை அணி மட்டும் இன்னும் பரிதாப நிலையிலேயே உள்ளது.

மும்பை அணி பரிதாபம்
இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்விகள் மட்டுமே மிஞ்சியது. வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் ரோகித் சர்மா, பல வியூகங்களை வகுத்துப் பார்த்துவிட்டார். எனினும் பேட்டிங் சரியாக அமைந்தால், பவுலிங் சொதப்புகிறது. பவுலிங்கில் கெத்து காட்டினால் பேட்டிங் வரிசை சொதப்பி விடுகிறது. எனவே இந்த முறை தவறுகளை சரிசெய்துக்கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவாக் தந்த அட்வைஸ்
இந்நிலையில் மும்பை அணியில் நடக்கும் தவறு குறித்து சேவாக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மும்பை அணியின் தொடர் தோல்விக்கு காரணம் வீரர்களுக்கு சரியாக வாய்ப்பு தராதது தான். அதிக அனுபவம் உள்ள டைமல் மில்ஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோரை நீக்கிவிட்டது. ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் நீக்கிவிடுவது தவறான முடிவு.

ரூல்ஸ் சமம் தான்
ராமந்தீப் சிங் ஒரு பேட்ஸ்மேன், ஓரளவிற்கு பவுலிங் வீசுவார். அவரை நம்பிய ரோகித் சர்மா, ஒரு நல்ல பவுலர், அதிரடி பேட்ஸ்மேனாக இருப்பதை கண்டுக்கொள்ளவில்லை. டேனியல் சாம்ஸ் நிச்சயம் கம்பேக் தருவார். பேட்ஸ்மேனுக்கு 2, 3 போட்டிகளில் வாய்ப்பு தருகின்றனர். ஆனால் பவுலருக்கு இந்த நிலைமையா? இக்கட்டான சூழலில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்கக் கூடியவர். எனவே ப்ளேயிங் 11-ஐ மாற்றுவதை ரோகித் நிறுத்த வேண்டும் என சேவாக் கூறியுள்ளார்.
Recommended Video

இன்றைய மாற்றங்கள்
மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்சிபிக்கு எதிரான கடந்த போட்டியில் பேட்டிங்கில் தான் தவறு செய்தது. எனவே இந்த முறை அதனை சரிசெய்துக்கொண்டு, அதே ப்ளேயிங் 11 உடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதில் டைமல் மில்ஸ் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications