Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது அதுல.. மும்பைக்கு ரிப்பீட்டாகும் 2014 ஐபிஎல் சீசன்.. முதல் 5 தோல்விக்கு பின் நடந்தது என்ன?

புனே: ஐபிஎல் 15வது சீசனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 5 முறை சாம்பியனான மும்பை அணி, நடப்பு சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 5 போட்டியில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் எஞ்சிய 9 போட்டியில் 8 போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு என்ற இக்கட்டான நிலைக்கு மும்பை தள்ளப்பட்டுள்ளது.

2014 ஐபிஎல் சீசன்

2014 ஐபிஎல் சீசன்

ஆனால் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இதே போன்று மும்பை அணி சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 5 போட்டியில் தோல்வியை தழுவியது. பின்னர் எஞ்சிய 9 போட்டியில் 7 ஆட்டங்களில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், புள்ளி பட்டியலில் 4வது இடத்தை மட்டுமே பிடித்ததால் எலிமினேட்டர் சுற்றில் மட்டுமே மும்பை விளையாடியது.

ஸ்கிரீன் பிளே

ஸ்கிரீன் பிளே

அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தோல்வியை தழுவிய மும்பை, தொடரிலிருந்து வெளியேறியது. தற்போது அதே போல ஸ்கிரீன் பிளே மாறியுள்ளது. 2014ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணி 11 போட்டியில் வென்று 22 புள்ளிகளுடன் இருந்தது. கொல்கத்தா 9 வெற்றிகளுடன் 2வது இடத்திலும், சிஎஸ்கே 9 வெற்றியுடன் 3வது இடத்திலும் இருந்தது.

7 வென்றால் போதும்

7 வென்றால் போதும்

முதல் 3 அணிகள் அதிக வெற்றியை பெற்றதால், அந்த தொடரில் 4வது இடம் பிடிக்கும் அணி 14 புள்ளிகளை பெற்றாலே போதும் என்ற நிலை உருவானது. அப்போது தொடர்ந்து 5 போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை, எஞ்சிய 9 போட்டியில் 7 ஆட்டங்களில் வென்றது. இதனால் மும்பை, ராஜஸ்தான் என 2 அணியும் 14 போட்டிகளில் இருந்தன.

Recommended Video

IPL 2022: Rohit fined for slow over rate in match against PBKS | OneIndia Tamil
ரன்ரேட்

ரன்ரேட்

இதனால் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றது, தற்போதும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணி அதிக வெற்றியை பெற்றால், 4வது இடம் பிடிக்கும் அணிக்கு சுலபமாகிவிடும். ஆனால் இம்முறை 10 அணிகள் பங்கேற்பதால் பந்தயம் இன்னும் கடுமையாகும். இதனால் ரன் ரேட் மிகவும் முக்கியம். இதனால் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது மும்பைக்கு இன்னும் பிளே ஆப் வாய்ப்பு உள்ளது.

Story first published: Thursday, April 14, 2022, 18:48 [IST]
Other articles published on Apr 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+