
தோனி கைவசம்
டாஸ் போட தொடங்குவதற்கு முன்பே ஜடேஜாவுக்கு தோனி கிளாஸ் எடுத்து கொண்டு இருந்தார்.இதனைத் தொடர்ந்து 131 என்ற இலக்கை Defend செய்ய போகிறோம் என்ற நெருக்கடியான கட்டத்தில் சிஎஸ்கே மைதானத்துக்குள் நுழைந்தது. அப்போது ஜடேஜா தான் வீரர்களிடையே பேசி தான் கேப்டன் என்று காட்டி கொண்டார். அதன் பிறகு எல்லாம் தோனி கைக்கு தான் சென்றது.

ஜடேஜா எங்கே?
சிஎஸ்கே கேப்டன் தோனி தான் என்பது போல், ஃபில்டர்களை நிறுத்துவது, பந்துவீச்சாளர்களை மாற்றுவது என அனைத்தையும் தோனி தான் பார்த்து கொண்டார். அவ்வளவு ஏன் ஸ்ட்ராடிஜிக் டைம் அவுட்டில் கூட பயிற்சியாளர் ஃபிளமிங் களத்துக்குள் வந்து தோனியிடம் தான் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது சீன்லேயே ஜடேஜாவை காணவில்லை. இதன் பிறகு ரிவியூ கேட்கும் போது தான், ஜடேஜா வந்து நடுவரிடம் கேட்டார்.

தோனி கண்ட்ரோல்
இதன் பின்னர் முழு கண்ட்ரோலும் தோனி கையில் தான் இருந்தது. கிட்டதட்ட பொம்பை கேப்டன் போல் தான் ஜடேஜா செயல்பட்டார். இந்த காட்சிகளை கண்டு வர்ணணையாளர்கள் ஹர்சா போக்லே மற்றும் கவாஸ்கர் கூட கிண்டல் செய்தனர். எனினும் அவர்கள் தோனி நடந்தது கொண்ட விதத்தில் தவறு இல்லை என்றும் விளக்கம் அளித்தனர்.
Recommended Video

விளக்கம்
தோனி விக்கெட் கீப்பர் என்பதால் மைதானத்தின் ஃபில்டர்கள் எங்கு நிற்க வேண்டும் என்ற கோணம் அவருக்கு தான் தெரியும். இதனால் ஃபில்டர்களை அவர் சரிப்படுத்துவதில் தவறு இல்லை என்று கூறினார். இதே போன்று பேசிய கவாஸ்கர், ஜேடேஜா கேப்டன் பதவிக்கு ரொம்ப புதியவர். எந்த அனுபவமும் இல்லாதவர். இதனால் சீனியர் என்ற முறையில் தோனி உதவி செய்வதில் தவறு இல்லை. இதனை நான் சொல்வதால் ஜடேஜா தவறாக நினைத்து கொள்ள கூடாது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











