Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் பிறந்தநாளன்று முதல் வெற்றியை பெறுமா மும்பை..சொந்த மைதானத்தில் முதல் போட்டி..லக்னோவுடன் மோதல்

மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் காட்ஃபாதராக விளங்கி வரும் சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் பரிசு அளிக்கும் விதமாக மும்பை இன்று முதல் வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி,நடப்பு சீசன் தொடக்கத்தில் முதல் 7 போட்டியையும் தோல்வியை தழுவி சோகமான சாதனையை படைத்துள்ளது.

வான்கடே மைதானம்

வான்கடே மைதானம்

இன்றைய ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ள லக்னோ அணியும், கடைசி இடத்தில் உள்ள மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சீசனில் முதல் முறையாக மும்பை அணி, தங்களது சொந்த மைதானமான வான்கடேவில் களமிறங்குகிறது. இதனால், மும்பை வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சின் பிறந்தநாள் அன்று..

சச்சின் பிறந்தநாள் அன்று..

மும்பை அணி, ஐபிஎல் வரலாற்றில் சச்சின் பிறந்தநாளன்று 4 முறை மோதியுள்ளது. இதில் 2011ஆம் ஆண்டு டெல்லியுடனும், 2013ஆம் ஆண்டு கொல்கத்தாவுடனும் மும்பை அணி வென்றது. ஆனால் 2017ஆம் ஆண்டு புனேவுடனும், 2018ஆம் ஆண்டு ஐதராபாத் அணியுடனும் மும்பை தோல்வியை தழுவியது. தற்போது சச்சின் பிறந்தநாளன்று 5வது முறையாக மும்பை களமிறங்குகிறது.

ரோகித் சொதப்பல்

ரோகித் சொதப்பல்

மும்பை அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டுமே குறையாக தென்படுகிறது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித், இஷான் கிஷன் நல்ல தொடக்கத்தை அளித்தால் மட்டுமே மும்பையால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும். ஒரு பக்கம், விராட் கோலி சொதப்புவதும், மறுபக்கம் ரோகித் சொதப்புவதும், ரசிகர்களை கவலை அடைய செய்தது.

பும்ரா மோசம்

பும்ரா மோசம்

மும்பை அணியின் பலமாக பார்க்கப்படும் பும்ராவே இம்முறை பந்துவீச்சில் சோபிக்கவில்லை. 2020ஆம் ஆண்டு 20 விக்கெட் மற்றும் பவுலிங் அவ்ரேஜ் 14 ஆக இருந்த பும்ராவின் புள்ளிவிவரம், இம்முறை வெறும் 4 விக்கெட் அவ்ரேஜ் 49.5 ஆக உள்ளது. மற்ற வீரர்களை கணக்கில் சேர்த்து கொள்ளவே முடியாது. இந்த தொடரின் மோசமான பந்துவீச்சு எகனாமி வைத்துள்ள அணியின் முதலிடத்தில் மும்பை உள்ளது.

Recommended Video

Aanee's Cricket Talks Epi 04 | Rumours We Heard About Cricketers | OneIndia Tamil
லக்னோவின் பலம்

லக்னோவின் பலம்

இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியில் சமீரா வேறு இருக்கிறார். சமிரா இதுவரை ரோகித்தை 6 முறை ஆட்டமிழக்க வைத்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சை கேஎல் ராகுல் எப்போதுமே நன்றாக அடித்து இருக்கிறார். ஆவேஷ் கானும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதனால் லக்னோ அணியை சமாளிப்பது மும்பைக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.

Story first published: Sunday, April 24, 2022, 23:17 [IST]
Other articles published on Apr 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+