Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பைக்கு எதிராக திரும்பிய நடுவர்கள்.. ரோகித்துக்கு நேரம் சரி இல்ல.. யுவராஜ் சிங் கொடுத்த நம்பிக்கை

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் மும்பை அணியின் தோல்விக்கு ரோகித் சர்மாவின் பேட்டிங்கும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

நடப்பு சீசனில் 11 போட்டியில் விளையாடியுள்ள ரோகித் சர்மா தற்போது தான் 200 ரன்களையே தொட்டுள்ளார். சராசரி வெறும் 18 தான்

ரோகித் சர்மாவின் ஐபிஎல் வாழ்க்கையில் அவர் அடித்துள்ள குறைந்தபட்ச ஸ்கோர், சராசரி இது தான்.

அவுட்டா? நாட் அவுட்டா?

அவுட்டா? நாட் அவுட்டா?

இந்த நிலையில், ரோகித் சர்மா குஜராத்துக்கு எதிரான போட்டியில் ஃபார்ம்க்கு திரும்பினார். இதனால், நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்திலும் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்றாம் நடுவரின் தவறான முடிவால் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் பேட்டில் பந்து படுவதற்கு முன்பே ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பட்டது என அசைவுகள் காட்டியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நெட்டிசன்கள் கிண்டல்

நெட்டிசன்கள் கிண்டல்

பொதுவாக மும்பை அணியையும், நடுவர்களை வைத்தும் பல மீம்ஸ்கள் வரும். அதற்கு காரணம், நடுவர்கள் எப்போதும் மும்பைக்கு ஆதரவாக சில முடிவுகளை எடுத்து விடுகிறார்கள் என நெட்டிசன்கள் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் தற்போது, மும்பைக்கு எதிராகவே நடுவர்கள் தவறான முடிவை அறிவித்து விட்டார்கள் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

யுவராஜ் நம்பிக்கை

யுவராஜ் நம்பிக்கை

இதனிடையே ரோகித் சர்மா குறித்து பேசிய யுவராஜ் சிங், ஹிட்மேனுக்கு தற்போது பேட் லக் இருப்பதாக குறிப்பிட்டார். பெரிய இன்னிங்ஸ் விரைவில் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்ட யுவராஜ் சிங், நல்ல மன உத்வேகத்துடன் இருக்கும் படி அறிவுறுத்தினார். விராட் கோலியை விட ரோகித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குறைவாக ரன்கள் அடித்துள்ளார்.

Recommended Video

IPL 2022 Mumbai Indians படுதோல்வி ! CSK அணிக்கு பின்னடைவு | Oneindia Tamil
கோலி Vs ரோகித்

கோலி Vs ரோகித்

ஆனால் ரோகித் சர்மா ஷாட் அடிப்பதில் எந்த குறையும் இல்லை. எந்த பந்துகளை எதிர்கொள்வதிலும் சிக்கல் இல்லை. ஆனால் விராட் கோலி ஷாட் அடிப்பதில், அவ்வளவு சிக்கல் இருக்கிறது. அவருடைய பழைய தங்கு தடையின்றி செல்லும் ஆட்டத்தை இப்போது பார்க்க முடிவதில்லை. தொடர்ந்து ஒரே மாதிரியான பந்தில் ஆட்டமிழந்து வருகிறார்.

Story first published: Tuesday, May 10, 2022, 15:20 [IST]
Other articles published on May 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+