Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2023 - CSK வில் இம்முறை அதிக ரன்கள் அடிக்க போவது யார் ? 4 பேர் மீது எகிறிய எதிர்பார்ப்பு

அகமதாபாத் : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. கடந்த தொடரில் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது. இதனால் இம்முறை சிஎஸ்கே, பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த சீசன் தோனிக்கு கடைசி தொடராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை பிளே ஆப் சுற்று சென்றுள்ள அணியை எடுத்து கொண்டால், அவர்களுடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேனில் குறைந்தது 2 பேர், ஆரஞ்ச் நிற தொப்பி பந்தயத்தில் போட்டி போடுவார்கள். அப்படி இம்முறை நடந்தால் மட்டுமே சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும்.

csk 2023

இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் அதிக ரன்கள் அடிக்க போகும் 4 வீரர்கள் யார் என்பதை தற்போது காணலாம். முதல் இடத்தில் இருப்பவர் ருத்துராஜ் கெய்க்வாட் தான். எப்போதுமே டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் தான் அதிக ரன்கள் எடுக்க வாய்ப்பாக இருக்கும். ருத்துராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் குறைந்த பட்சம் 5 அரைசதம், 1 சதம் அடிக்க முயற்சி செய்தாலே ஆரஞ்ச் நிற தொப்பிக்கு போட்டி போடுவார்.

இதே போன்று ஆரஞ்ச் நிற தொப்பிக்கு போட்டி போடும் மற்றொரு நபர் பென் ஸ்டோக்ஸ். இம்முறை ஸ்டோக்ஸ் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் தான் செயல்படுவார் என்பதால் இம்முறை பேட்டிங்கில் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணி பவர்பிளேவில் அதிக ரன்கள் அடித்தால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும்.

csk ben stokes

இந்த பந்தயத்தில் அம்பத்தி ராயுடுக்கும் இடம் இருக்கிறது. பேட்டிங்கில் வரிசையில் அவருக்கு 3வது மற்றும் 4வது வீரராககளமிறங்கினால் ராயுடுவால் சாதிக்க முடியும். அதற்கு ராயுடு குறைந்தது 3 போட்டிகளில் பெரிய ஸ்கோர் அடித்து அணியை தனி ஆளாக காப்பாற்றினால், இது சாத்தியமாகும்.

இதே போன்று தொடக்க வீரராக ஸ்டோக்ஸ்க்கு பதிலாக நியூசிலாந்து விரர் டிவோன் கான்வேக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், அவருக்கும் இந்த பந்தயத்தில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் பெரிய ரிஸ்க் எடுக்காமலேயே 50 ரன்களை தாண்டுவதில், கான்வே வல்லவர். இதனால் வாய்ப்பு கிடைத்தால், கான்வேவை ஆரஞ்ச் நிற தொப்பியுடன் நாம் பார்க்கலாம்.

Story first published: Friday, March 31, 2023, 17:11 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+