Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிடில் ஓவரில் வெறும் 66 ரன்கள்.. பஞ்சாப் அணியை காத்த ஷாரூக் கான்.. கேகேஆர் அணிக்கு 180 ரன்கள் இலக்கு

கொல்கத்தா: கொல்கத்தா அணி வெற்றிபெறுவதற்கு பஞ்சாப் அணி சார்பாக 180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் 57 ரன்கள் சேர்த்த நிலையில், கேகேஆர் அணியின் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. கொல்கத்தா அணிக்கு வாழ்வா, சாவா போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணி சார்பாக பிரப்சிம்ரன் சிங் - ஷிகர் தவான் கூட்டணி களமிறங்கியது.

IPL 2023: After the heroic of Sharukh Khan, Punjab set a target of 180 Runs for KKR to win

முதல் ஓவரிலேயே பவுண்டரி விளாசி அதிரடி காட்டிய நிலையில், பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேரினார். தொடர்ந்து வந்த ராஜபக்சே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதையடுத்து ஒரு முனையில் ஷிகர் தவான் நிதானமாக விளையாட, இன்னொரு பக்கம் லிவிங்ஸ்டன் அதிரடி காட்டினார்.

அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசிய லிவிங்ஸ்டன் 15 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிகர் தவான் - ஜித்தேஷ் சர்மா கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி என்று பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். ஆனால் கொல்கத்தா அணி ஒட்டுமொத்த ஸ்பின்னர்களையும் வைத்து அட்டாக் செய்தது. ஸ்பின்னர்களை எதிர்த்து ரன்கள் எடுக்க திணறிய சூழலில், ஜித்தேஷ் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ட்ந்து ஷிகர் தவான் 41 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

IPL 2023: After the heroic of Sharukh Khan, Punjab set a target of 180 Runs for KKR to win

இதனால் ஷிகர் தவான் பெரிய இலக்கை நோக்கி அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 57 ரன்களில் ஆட்டமிழந்து அவரும் வெளியேற, பஞ்சாப் ரசிகர்களின் நம்பிக்கையும் உடைந்தது. தொடர்ந்து வந்த ரிஷி தவான் 11 பந்துகளில் 19 ரன்களையும், சாம் கரண் 9 பந்துகளில் 4 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 17.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்திருந்தது.

கடைசி ஓவர்களில் ஷாரூக் கான் - ஹர்ப்ரீத் ப்ரார் களத்தில் இருந்தனர். 19வது ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசப்பட, 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதையடுத்து கடைசி ஓவரில் ஷாரூக் கான் 15 ரன்கள் சேர்க்க, ஹர்ப்ரீத் ப்ரார் ஒரு சிக்சர் அடித்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 179 ரன்கள் சேர்த்துள்ளது. கொல்கத்தா அணி சார்பாக வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Monday, May 8, 2023, 21:37 [IST]
Other articles published on May 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+