சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முதலில் செல்வது யார் என்று சிஎஸ்கே, குஜராத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குவாலிபையர் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதில் ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 60 ரன்களும், கான்வே 30 பந்தில் 40 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சாஹா, சுப்மன் கில் ஜோடி பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சாஹா 12 ரன்களில் ஆட்டமிழக்க, பவர்பிளே முடிவதற்குள்ளே தோனி சுழற்பந்துவீச்சாளர்களை பந்து வீச அழைத்தார்.
இதில் கட்டுக்கோப்பாக பந்துவீசிய தீக்சனா கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்களல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஜடேஜா கையில் பந்து வந்ததும், அவர் ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்தினார். குறிப்பாக சிஎஸ்கே பவுலர்களுக்கு தண்ணீர் காட்டிய சுப்மன் கில்லுக்கு, ஜடேஜா தக்க பதிலடி தந்தார்.
குறிப்பாக ஒரு பந்து திரும்பியது மட்டுமல்லாமல், திடீரென்று யாருமே எதிர்பாராத வகையில் எம்பியது. இதனை கொஞ்சம் கூட கணிக்காத சுப்மன் கில் ஷாக் ஆகி நின்றார். இதனை பந்து நாக பாம்பு போல் திரும்பி எழுந்ததாக கிரிக்கெட் வர்ணணையில் இருந்த த ரவி சாஸ்த்ரி பாராட்டினார். இதனை பார்த்த ரசிகர்கள் வித்தைக்காரன் யா ஜடேஜா என்று புகழ்ந்து வருகின்றனர்.