Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியால் கொல்கத்தாவில் சிக்சர் மழை.. வெறியாட்டம் ஆடிய ரஹானே.. கேகேஆர்-க்கு 236 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற 236 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை அணி சார்பாக ரஹானே 71*, கான்வே 56, சிவம் துபே 50 ரன்கள் விளாசினர்.

16வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து சென்னை அணி தரப்பில் வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட் - கான்வே இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

IPL 2023: Chennai Super Kings set a target of 236 runs for KKR at Eden Garden

முதல் சில ஓவர்கள் நிதானம் காட்டிய இருவரும், அடுத்தடுத்த ஓவர்களில் கியரை அதிரடிக்கு மாற்றினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தனர். இதன் பின்னர் சிறப்பாக ஆடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரஹானே ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டார். இன்னொரு பக்கம் வெளுத்து வாங்கிய கான்வே 34 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக கான்வே அடிக்கும் 4வது அரைசதம் இதுவாகும்.பின்னர் கான்வே 56 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹானே - சிவம் துபே இணைந்தனர். இந்த கூட்டணி இணைந்ததில் இருந்து சிக்சர்கள் பறந்துகொண்டே இருந்தது. வருண் சக்கரவர்த்தி வீசிய ஓவரில் அடுத்தடுத்து துபே 2 சிக்சர்களை பறக்கவிட, தன் பங்கிற்கு ரஹானே உமேஷ் யாதவ் பந்துவீச்சில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார். இதன் காரணமாக 16 பந்துகளில் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை எட்டியது. அதேபோல் சிஎஸ்கே அணியின் ஸ்கோரும் 15 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை எட்டியது.

இதையடுத்து ரஹானே 24 பந்துகளில் அரைசதம் அடிக்க, இன்னொரு பக்கம் சிவம் துபே 20 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். பின்னர் துபே 50 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா - ரஹானே கூட்டணி இணைந்தது. ஆனால் ரஹானே தனி ஆளாக சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். வருண் சக்கரவர்த்தி வீசிய 19வது ஓவரில் மட்டும் 19 ரன்கள் விளாசப்பட்டது. பின்னர் கடைசி ஓவரில் ஜடேஜா 2 சிக்சர்களை பறக்கவிட, 4வது பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் சென்னை அணியின் கேப்டன் தோனி களத்திற்கு வர, ரசிகர்களின் கரகோஷம் விண்ணை தொட்டது. கெஜ்ரோலியா வீசிய 5வது பந்தில் நோ-பாலாக மாற, ஃபிரீ ஹிட் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பந்தை தோனி மிஸ் செய்தார். இதையடுத்து கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் விளாசியது. சென்னை அணி சார்பாக மொத்தமாக 18 சிக்சர்கள் விளாசப்பட்டது. அதிகபட்சமாக ரஹானே 29 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Story first published: Sunday, April 23, 2023, 21:29 [IST]
Other articles published on Apr 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+