Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிளேயிங் லெவனில் டிவிஸ்ட்.. சென்னைக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. பேட்டிங்கை தேர்வு செய்த தல தோனி

சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கி உள்ளது. இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வியுடன் 13 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல் டெல்லி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

IPL 2023: chennai super Kings won the toss and chose to bat against Delhi Capitals

இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து சென்னை அணி கேப்டன் தோனி பேசுகையில், சேப்பாக்கம் மைதானத்தில் சில போட்டிகளில் விளையாடிவிட்டோம். இரண்டாம் பாதியில் பிட்ச்சில் வேகம் குறைவாக உள்ளது. அதனால் எங்கள் திட்டத்தை செயல்படுத்தி வெற்றிபெற விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் 3 வெளிநாட்டு வீரர்களை தான் பயன்படுத்துகிறது. பதிரானாவை தோனி இம்பேக்ட் வீரராக அறிவித்துள்ளார். அதேபோல் டெல்லி அணி சார்பாக மணீஷ் பாண்டே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக லலித் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், லலித் யாதவை டெல்லி அணி கொண்டு வந்துள்ளது. இதனால் 3 ஸ்பின்னர்களுடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது.

சென்னை அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ரஹானே, ராயுடு, மொயின் அலி, ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சஹர், பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா

டெல்லி அணி விவரம்: டேவிட் வார்னர், பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரூஸொவ், அக்சர் படேல், அமான் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அஹ்மத், இஷாந்த் சர்மா

Story first published: Wednesday, May 10, 2023, 19:09 [IST]
Other articles published on May 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+