Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை அணிக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. பந்துவீச்சை தேர்வு செய்த தோனி.. நடராஜனை நீக்கிய ஐதராபாத்!

சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே, 3 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஐதராபாத் அணி ஆடியுள்ள 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

IPL 2023: Chennai Super Kings won the toss and elects to bowl first against Hyderabad in Chepauk

இந்த நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணி தரப்பில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் எம்எஸ் தோனி களமிறங்கியுள்ளார். தொடர்ந்து இரண்டாவது பேட்டிங்கின் போது பனிப்பொழிவு அதிகமிருக்கும் என்பதால், சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானம் என்பதால் சான்ட்னர் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் தீக்சனாவையே அணியில் சேர்த்துள்ளது. அதேபோல் ஐதராபாத் அணி தரப்பில் நடராஜன் நீக்கப்பட்டு உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் நடராஜன் இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் இருக்கிறார்.

IPL 2023: Chennai Super Kings won the toss and elects to bowl first against Hyderabad in Chepauk

சென்னை அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, ஜடேஜா, எம்எஸ் தோனி, தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், பதிரானா

ஐதராபாத் அணி விவரம்: ப்ரூக், மயங்க் அகர்வால், ராகுல் த்ரிப்பாட்டி, மார்க்ரம், கிளாஸன், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ யான்சன், புவனேஷ்வர் குமார், மார்க்கண்டே, உம்ரான் மாலிக்

Story first published: Friday, April 21, 2023, 19:11 [IST]
Other articles published on Apr 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+