Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - முதல் ஆட்டத்திலேயே CSK க்கு அடித்த லக்.. குஜராத் அணியில் முக்கிய வீரர் இல்லை.. பிளேயிங் XI

அகமதாபாத் : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடரில் முதல் லீக் ஆட்ட்த்தில் சிஎஸ்கே அணியும், நடப்பு சாம்பியனுமான குஜராத் அணியும் மோதுகிறது. இந்தப் போட்டிக்காக அகமதாபாத்தில் ஒரு லட்சம் டிக்கெட விற்று தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 2 முறை மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே அணி 2 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியது.

இதனால் இம்முறை பதிலடி கொடுக்க வேண்டிய உத்வேகத்தில் சிஎஸ்கே அணி வீரர்கள் களமிறங்குகின்றனர். அகமதாபாத் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வீரராக விளங்குகிறார்.

csk vs gt 2023

குஜராத் அணியின் பலமாக சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, மேத்தீவ் வெட், போன்ற வீரர்கள் உள்ளனர். வில்லியம்சனின் வருகை மூலம், குஜராத் அணி விக்கெட்டுகள் விழுந்தாலும் ஆங்கர் ரோல் செய்து அணியை கரை சேர்த்து விடுவார். ஆனால், குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது டேவிட் மில்லர் முதல் போட்டியில் பங்கேற்காதது தான்.

கடந்த சீசனில் குஜராத் அணி பேட்டிங்கில் சரியும் போது எல்லாம், டேவிட் மில்லர் தான் அணியை காப்பாற்றி இருக்கிறார். அவ்வளவு ஏன் சென்னை அணி கடந்த முறை தோல்வி அடைந்ததற்கு டேவிட் மில்லரின் அதிரடி இன்னிங்ஸ் தான் காரணம். தற்போது மில்லர் இல்லாததால் சிஎஸ்கே அணி க்கு கூடுதல் சாதகமாக கருதப்படுகிறது.

இதே போன்று சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பலமாக காணப்பட்டாலும், டேத் ஓவர் பவுலிங் கொஞ்சம் வீக்காக காணப்படுகிறது. மேலும் இலங்கை வீரர் மகீஷ் தீக்சனா , சிஎஸ்கே அணிக்காக முதல் 3 போட்டியில் பங்கேற்க மாட்டார். எனினும் மொயின் அலி, மிட்செல் சாண்ட்னர், ஆகியோரை வைத்து சிஎஸ்கே சமாளித்து விடலாம். தோனி, ருத்துராஜ், ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், ராயுடு ஆகியோர் பேட்டிங் நம்பியே சிஎஸ்கே உள்ளது.

சிஎஸ்கே பிளேயிங் லெவன் :1, ருத்துராஜ் கெய்க்வாட், 2, பென் ஸ்டோக்ஸ், 3, மொயின் அலி, 4, அம்பத்தி ராயுடு, 5, தோனி, 6, ஜடேஜா, 7, சிவம் துபே, 8, தீபக் சாஹர், 9, மிட்செல் சாண்ட்னர், 10, பிரிட்டோரியஸ், 11, தேஷ்பாண்டே

குஜராத் அணி பிளேயிங் லெவன்: 1, சுப்மன் கில், 2,விரித்திமான் சாஹா, 3, வில்லியம்சன், 4, மேத்தீவ் வெட், 5 ஹர்திக் பாண்டியா, 6, ராகுல் திவாட்டியா, 7, ரஷித் கான், 8, சிவம் மவி, 9, சாய் கிஷோர், 10, அல்சாரி ஜோசப், 11, முகமது ஷமி

Story first published: Friday, March 31, 2023, 6:20 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+