Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - மும்பையை வெளுத்து வாங்கிய சிஎஸ்கே.. MI கோட்டையிலேயே வெற்றி கொடி.. 4வது முறையாக வெற்றி

மும்பை : ஐபிஎல் 2023 ஆம் ஆண்டில் சிஎஸ்கே ரசிகர்களின் மிகப் பெரிய ஆசையின் ஒன்று தற்போது நிறைவேறியுள்ளது. மும்பையை அதன் சொந்த மண்ணில் சிஎஸ்கே அணி வீழ்த்தி வெற்றி கொடி நாட்டியுள்ளது. இதன் மூலம் வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே அணி 4வது முறையாக வென்றுள்ளது.

டாஸ் வென்ற டாஸ் வென்று சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ரோகித், இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் ஆட்டமிழந்த நிலையில், பவர்பிளேவில் மும்பை அணி 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்தது.

IPL 2023 - CSK Beat MI by 7 wickets and registered 4th win at wankhade

இதனையடுத்து இஷான் கிஷன் தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் வெளியேறினார். , கடந்த ஆட்டத்தில் மும்பையை காப்பாற்றிய திலக் வர்மா 22 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். அர்ஷத் கான் 2 ரன்னிலும், ஸ்டப்ஸ் 5 ரன்களில் வெளியேறினர்.டிம் டேவிட் 31 ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 3 விக்கெட்டுகளும், சாண்ட்னர் மற்றும் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

IPL 2023 - CSK Beat MI by 7 wickets and registered 4th win at wankhade

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே கான்வே டக் அவுட்டாக, ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்த ரஹானே மும்பை பந்துவீச்சை சிதறடித்தார். ஆர்ஷத் கான் வீசிய 4 ஓவரில் மட்டும் ரஹானே 24 ரன்கள் விளாச, ரஹானே 19 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ரஹானே 27 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.

சிவம் துபே பொறுப்பாக விளையாடி 28 ரன்கள் சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ருதுராஜ் 40 ரன்கள் சேர்க்கஅம்பத்தி ராயுடு 3 பவுண்டரிகளை அடித்து 20 ரன்கள் சேர்க்க, 11 பந்துகள் எஞ்சிய நிலையில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

Story first published: Saturday, April 8, 2023, 23:12 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+