Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேப்பாக்கத்தில் வேட்டைக்கு தயாராகும் தல தோனி.. ஐதராபாத் அணிக்கு எதிராக தெறி பேட்டிங் ரெக்கார்ட்ஸ்!

சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிராக 18 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே கேப்டன் தோனி, 48.8 சராசரியுடன் 145.24 ஸ்ட்ரைக் ரேட்டில் 488 ரன்கள் விளாசியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள போட்டியில் சென்னை அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாட உள்ளது. இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே, 3 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஐதராபாத் அணி ஆடியுள்ள 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

IPL 2023: CSK Captain MD Dhoni scored 488 Runs against Sunrisers Hyderabad at an average of 48.40

இதுவரை இரு அணிகளும் 18 முறை மோதி இருக்கிறார்கள். இதில் சென்னை அணி 13 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து முறையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே அணி நான்கு முறையும் ஹைதராபாத் ஒரு முறையும் வென்றிருக்கிறது. இதனால் சென்னை அணியின் ஆதிக்கம் தொடரும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட இரு அணிகள் மோதிக் கொள்ள உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் தோனியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஏனென்றால் இதுவரை ஐதராபாத் அணிக்கு எதிராக 18 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 488 ரன்கள் விளாசியுள்ளார். அதிலும் 48.80 சராசரியுடன் 145.24 ஸ்ட்ரைக் ரேட்டில் தோனி விளையாடியுள்ளதால், சேப்பாக்கம் மைதானத்தில் இன்று வாண வேடிக்கையை தோனி நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியில் தொடக்க வீரர் டெவோன் கான்வே விக்கெட் கீப்பிங் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். கடந்த போட்டியிலேயே டூ பிளஸிஸ் கொடுத்த கேட்ச்சை தோனியால் பிடிக்க முடியாமல் சிரமத்தை சந்தித்தார். இதற்கு தோனியின் கால்களில் உள்ள காயமே காரணமாக சொல்லப்பட்டது. இதனால் இன்றையப் போட்டியில் தோனி விக்கெட் கீப்பராக அல்லாமல் ஃபீல்டராக களமிறங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Friday, April 21, 2023, 9:25 [IST]
Other articles published on Apr 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+