Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023 - சிஎஸ்கே விளையாடும் போட்டிகள் அட்டவணை இதோ.. 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஆட்டம்

சென்னை : ஐபிஎல் 2023ஆம் ஆண்டின் கிரிக்கெட் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி வரும் மே 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.

சென்னை அணி 4 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. புதிய சீசனில் சென்னை அணி 7 லீக் ஆட்டத்தில் சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது.

சொந்த மண்ணில் சிஎஸ்கே

சொந்த மண்ணில் சிஎஸ்கே

வரும் ஏப்ரல் 3ஆம் தேதி சிஎஸ்கே அணி ,சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோவை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 8ஆம் தேதி 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 12ஆம் தேதி ராஜஸ்தானை தங்களது சொந்த மண்ணில் சிஎஸ்கே அணி களமிறங்குகிறது.

அட்டவணை விவரம்

அட்டவணை விவரம்

ஏப்ரல் 17ஆம் தேதி பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில் சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி சிஎஸ்கே அணி , ஐதராபாத்தை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி கொல்கத்தாவில் கே கே ஆர் அணியையும், ஏப்ரல் 27ஆம் தேதி ஜெய்ப்பூரில் ஆர்ஆர் அணியையும் சிஎஸ்கே மோதுகிறது.

தொடர்ந்து 3 போட்டி

தொடர்ந்து 3 போட்டி

ஏப்ரல் 30ஆம் தேதி சொந்த மண்ணில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் சிஎஸ்கே மே 4ஆம் ததி லக்னோவில் லக்னோ ஜெய்ன்ட்ஸ் உடன் மோதுகிறது. மே 6ஆம் தேதி மீண்டும் சென்னை அணி தனது சொந்த மண்ணில் மும்பையை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து மே 10ஆம் தேதி டெல்லியையும், மே 14ஆம் தேதி கொல்கத்தாவையும் சிஎஸ்கே தங்களது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

எத்தனை முறை மோதல்

எத்தனை முறை மோதல்

மே 20ஆம் தேதி டெல்லியில் டெல்லி கேபிட்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணி பஞ்சாப், ஐதராபாத், ஆர்சிபி, குஜராத் அணிகளுடன் ஒரு முறையும், மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி , லக்னோ அணிகளுடன் தலா 2 முறையும் மோதுகிறது.

Story first published: Friday, February 17, 2023, 17:51 [IST]
Other articles published on Feb 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+