Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சிஎஸ்கே.. பிளேயிங் லெவனில் மாற்றம்.. LSG அணியில் ராகுல் களமிறங்குவாரா?

லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. தொடர்ந்து சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில், இன்று வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

லக்னோ அணியை பொறுத்தவரை, பெங்களூருக்கு எதிராக குறைந்த இலக்கை கூட துரத்த முடியாமல் தோல்வியை தழுவியது. மேலும் விராட் கோலி, அந்த அணி வீரர்களுடன் சண்டை போட்டதும், அதற்கு அவர்கள் பதிலடி தந்ததும் என பல சர்ச்சை நிகழ்ந்துள்ளது.

IPL 2023 - CSK might change their playing xi vs Lucknow game

இந்த சர்ச்சை லக்னோ அணியின் கவனத்தை சிதற அடித்திருக்கலாம். இதனால் மீண்டும் போட்டியில் கவனத்தை அவர்கள் செலுத்த வேண்டும். லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்றைய ஆட்டத்தில் அவர் பங்கேற்பாரா இல்லையா என்பது சந்தேகமாகி உள்ளது.

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை தீக்சனா, பந்துவீச்சு மற்றும் ஃபில்டிங்கில் சொதப்பி வருகிறார். இதனால் மிட்செல் சாண்ட்னரை பயன்படுத்த சிஎஸ்கே யோசிக்கலாம். இதே போன்று தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் ஆகியோர் பவுலிங்கில் சொதப்புவது சிஎஸ்கேவிற்கு தலைவலியை ஏற்படுத்தியள்ளது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு பல பிரச்சினைகள் இருக்கிறது. எனினும், லக்னோ ஆடுகளம் மிகவும் தோய்வாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், சிஎஸ்கேவுக்கு சாதகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிஎஸ்கே பந்துவீச்சு காலை வாரிவிடாமல் இருக்க வேண்டும்.

IPL 2023 - CSK might change their playing xi vs Lucknow game

லக்னோ வீரர் மெயர்ஸ் நடப்பு சீசனில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறார். எனினும் சிஎஸ்கே அணியின் மோயின் அலி அவரை 2 முறை ஆட்டமிழக்க செய்திருக்கிறார். சிஎஸ்கேவுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பதே ஜடேஜாவின் பேட்டிங் தான். கடந்த சில போட்டிகளில், அதுவும் ஸ்ப்பின்னருக்கு எதிராக ஜடேஜா மோசமாக விளையாடி வருகிறார். இதனால் இன்றைய போட்டி சிஎஸ்கேவுக்கு மிகவும் நெருக்கடியான ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே பிளேயிங் லெவன் : 1, கான்வே, 2, ருதுராஜ், 3, மோயின் அலி, 4, ரஹானே, 5, சிவம் துபே, 6, ஜடேஜா, 7 ராயுடு, 8, தோனி, 9, மிட்செல் சாண்ட்னர் / தீக்சனா, 10, தேஷ் பாண்டே , 11, ஆகாஷ் சிங்

Story first published: Wednesday, May 3, 2023, 0:20 [IST]
Other articles published on May 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+