Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கிருந்து வந்த தங்கம்.. தொடர்ந்து 4 அரைசதம் அடித்த கான்வே.. ருதுராஜ் அவுட்டானதும் ஓவராக கத்திய KKR

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி, 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் சிறியது என்பதால் 200 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதனால் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் மற்றும் கான்வே ஆகியோர் கொல்கத்தா பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு சிக்சர்களை அடித்தனர்.

IPL 2023 - CSK opening batsman Devon conway hits 4 consecutive fifties

மைதானம் சிறியது என்பதால், அடித்த பந்துகள் எல்லாம் பவுண்டரிக்கு சென்றது. பவர்பிளே முடிவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது. கடந்த 2 இன்னிங்ஸ் ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இன்றைய ஆட்டத்தில் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். இந்த நிலையில் சுயாஷ் சர்மா பந்துவீச்சில் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். இதனால் சுயாஷ சர்மா ஓவராக திமிராக கத்தினார்.

இதற்கு மறுமுனையில் நின்ற கான்வே தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தார். 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் கான்வே 56 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து 4 முறை அரைசதம் அடித்து கெய்கவாட் சென்னை ரசிகர்களின் நாயகனாக உருவாகி உள்ளார்.

Story first published: Sunday, April 23, 2023, 20:55 [IST]
Other articles published on Apr 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+