Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 16வது சீசன்.. சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன்.. தோனி யாருக்கு வாய்ப்பு தருவார்?

அகமதாபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் தங்களது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணி முதல் போட்டியில் பிளேயிங் லெவனில் யாரை களமிறக்கும், யார் 4 வெளிநாட்டு வீரர்கள், யார் இம்பேக்ட் வீரர் என்பதை தற்போது காணலாம்.

4 வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்தினால் இம்பேக்ட் வீரரை இந்தியராக தான் பயன்படுத்த முடியும் என்ற விதி உள்ளது. இதனால் மற்ற அணிகள் 3 வெளிநாட்டு வீரரை பயன்படுத்த முடிவோடு இருக்கிறது.ஆனால் தோனி அந்த தவறை செய்ய மாட்டார்.

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

தற்போது சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளதால் அவருக்கு தொடக்க வீரர் என்ற இடம் தான் சரியாக இருக்கும். இதனால் டிவோன் காம்பே அணியில் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ருத்துராஜ் ஸ்டோக்ஸ் ஜோடியா, இல்லை ருத்துராஜ் பென் ஸ்டோக்ஸ் ஜோடியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடுவரிசை

நடுவரிசை

சுரேஷ் ரெய்னா, உத்தப்பா என 2 அனுபவ வீரர்களும் இல்லாமல் சிஎஸ்கே அணி இம்முறை களமிறங்குகிறது, இதனால் மொயின் அணி 3வது இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. 4வது வீரராக அம்பத்தி ராயுடு விளையாடுவது தான் சரியாக இருக்கும். இதே போன்று 5வது இடத்தில் தல தோனி களமிறங்க கூடும்.

ஆல்ரவுண்டர்கள்

ஆல்ரவுண்டர்கள்

ஆறாவது வீரராக ஆல் ரவுண்டர் ஜடேஜா விளையாடக் கூடும். 7வது வீரராக சிவம் துபே விளையாடக் கூடும். எனினும் இடது கை , வலது கை பேட்ஸ்மேன்கள் காம்பினேஷன் வேண்டும் என தோனி நினைத்தால், இவ்விரு விரர்களையும் நடுவரிசையில் கூட தோனி களமிறக்கலாம். 8து வீரராக ஆல்ரவுண்டர் தீபக் சாஹர் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

9வது வீரராக வெளிநாட்டு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ்க்கு அதிக வாய்ப்பு உள்ளது, இல்லையெனில் தென்னாப்பிரிக்க வீரர் மங்காலா விளையாடவும் வாய்ப்பு உள்ளது. 10வது வீரராக இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்சனா விளையாடலாம். அவர் இல்லை என்றால் நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் விளையாடலாம். 11வது வீரராக இந்திய வேகப்பந்துவீச்சாளர் துஷ்பாண்டே, சிம்ரன்ஜித் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

பிளேயிங் வெலன்

பிளேயிங் வெலன்

1, ருத்துராஜ் கெய்க்வாட், 2, பென் ஸ்டோக்ஸ், 3, மொயின் அலி, 4, அம்பத்தி ராயுடு, 5, ஜடேஜா, 6, தோனி, 7, சிவம் துபே, 8, பிரிட்டோரியஸ் / மங்காலா, 9.திபக் சாஹர், 10, மகீஷ் தீக்சனா, 11, தீஷ்பாண்டே/ ஷிம்ரன்ஜித் சிங்

Story first published: Wednesday, March 29, 2023, 13:36 [IST]
Other articles published on Mar 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+