Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடப்பு சீசனில் சிஎஸ்கேவின் குறைந்த ஸ்கோர்.. வெற்றியை தேடி தருவார்களா பவுலர்கள்.. KKR அசத்தல் பவுலிங்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருந்தாலும், இன்னும் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில், கேகேஆர் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.

இதில் வெற்றி பெற்றால், பிளே ஆப் சுற்று உறுதி ஆவதோடு, சிஎஸ்கே அணி முதலிடத்தையும் பிடித்துவிடும். இந்த நிலையில், ஆடுகளம் தோய்வாக இருக்கும் என்பதால் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது.

 IPL 2023 - CSK set 145 runs as target vs delhi capitals

கொல்கத்தா வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீச, சிஎஸ்கே வீரர்களால் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க முடியவில்லை. ஆட்டத்தின் தொடக்க சில ஓவர்கள் மட்டும் சிஎஸ்கே அணிக்கு ரன்கள் கிடைத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் ஆட்டமிழக்க, கான்வே மற்றும் ரஹானே சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

பவர்பிளே முடிவில் சிஎஸ்கே அணிஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 16 ரன்களில் வெளியேற, கான்வே 30 ரன்கள் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயுடு 4 ரன்களிலும், மோயின் அலி 1 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, சிஎஸ்கே அணி 72 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்இழந்து தடுமாறி வருகிறது.

இதனையடுத்து, சிவம் துபே, ஜடேஜா இணைந்து பொறுப்பாக விளையாடி அணியை சரிவிருந்து மீட்டனர். சிவம் துபே 3 சிக்சர் அடிக்க 34 பந்தில் 48 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 20 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். இறுதியில் தோனி 2 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. சுனில் நரன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Sunday, May 14, 2023, 21:49 [IST]
Other articles published on May 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+