For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்சிபி பவுலிங்கை கூட அடிக்க முடியல.. டெல்லிக்கு தொடர்ந்து 5வது தோல்வி.. சோகத்தில் கங்குலி, பாண்டிங்

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம், டெல்லி அணி தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இனி விளையாட உள்ள 9 போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் டுபிளஸிஸ் 22 ரன்களும், விராட் கோலி அரைசதமும் எடுத்தனர். 132 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் இருந்த பெங்களூரு அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தது.

IPL 2023 - DC Loses 5th straight games as RCB Beat them by 23 runs

இதன் மூலம் ஆர்சிபி அணி 6 விக்கெட்டு இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆக, மிட்செல் மார்ஷ் டக் அவுட்டாகியும், யாஷ் துல் ஒரு ரன்னில் வெளியேறியும் ஆட்டமிழந்தனர்.

இதனால் டெல்லி அணி 2 ரன்களுக்கு எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வார்னர் 13 ரன்களிலும், அபிஷேக் போரரேல் 5 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட் இழந்தாலும், மணிஷ் பாஙணடே பொறுமையாக விளையாடி அரைசதம் எடுத்தார்.

எனினும் அவர் ட்டமிழந்த உடன், டெல்லி அணியின் விக்கெட்டுகள் சரிந்தது. இறுதியில் நோக்கியா 23 ரன்கள் சேர்க்க, டெல்லி அணி 9 விக்கெட்டு இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தொடர்ந்து 5வது போட்டியில் தோற்றது. அறிமுக போட்டியில் விளையாடிய ஆர்சிபி வீரர் விஜய்குமார் விஷ்யக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Story first published: Saturday, April 15, 2023, 19:22 [IST]
Other articles published on Apr 15, 2023
English summary
IPL 2023 - DC Loses 5th straight games as RCB Beat them by 23 runs ஆர்சிபி பவுலிங்கை கூட அடிக்க முடியல.. டெல்லிக்கு தொடர்ந்து 5வது தோல்வி.. சோகத்தில் கங்குலி, பாண்டிங்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+