Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs DC:நீ பேசாம கமெண்டரிக்கேபோய்டு சிவாஜி..முடிவுக்கு வரும் தினேஷ்கார்த்திக் கிரிக்கெட் வாழ்க்கை

பெங்களூரு : ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் ஆர் சி பி அணி வெறும் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் தான் வென்று இருக்கிறது. இரண்டு தோல்வியை தழுவி இருக்கிறது.இதற்கு காரணம் ஆர்.சி.பி அணியின் பேட்டிங் தான் விராட் கோலி டுபிளசிஸ் ஆகிய வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிப்பதில்லை.

இதன் காரணமாக ஆர் சி பி அணி கடந்த இரண்டு ஆட்டங்களாக தோல்வியை தழுவி இருக்கிறது.அதுவும் ஆர் சி பி அணி, கடந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தான். பேட்டிங் இறுதியில் வந்து பல போட்டிகளை ஆர்சிபி அணிக்காக கடந்த ஆண்டு தினேஷ் கார்த்திக் வென்று கொடுத்தார்.

IPL 2023: Dinesh Karthik Poor Batting Form Hurting RCB Badly

இதன் காரணமாக இந்திய அணியிலும் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைத்தது.
ஆனால் சமீப காலமாக தினேஷ் கார்த்திக்கின் ஃபார்ம் மோசமாக இருக்கிறது. ஏற்கனவே இந்திய டி20 அணியில் தன்னுடைய இடத்தை இழந்ததால் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றினார். தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடிய தினேஷ் கார்த்திக், மும்பை அணிக்கு எதிராக மூன்று பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆனார்.

கொல்கத்தாவுக்கு எதிராக 8 பந்துகளை எதிர் கொண்டு 9 ரன்களை மட்டுமே தினேஷ் கார்த்திக் எடுத்தார். லக்னோ மணிக்கு எதிராக ஒரு ரன்னும், இன்று டெல்லிக்கு எதிராக டக் அவுட் ஆகியும் பெங்களூர் ரசிகர்களை தினேஷ் கார்த்திக் வெறுப்படைய வைத்திருக்கிறார். நடப்பு தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் மொத்தமாகவே 10 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

இதனால் தினேஷ் கார்த்திக் அணியை விட்டு நீக்க ஆர் சி பி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இருப்பினும் தமது ஃபார்ம் மோசமாக இருப்பதை உணர்ந்து கொண்ட தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளது.

Story first published: Saturday, April 15, 2023, 17:34 [IST]
Other articles published on Apr 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+