For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2023: கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள்.. லக்னோவை அலறவிட்ட மோகித் சர்மா.. கேஎல் ராகுலால் வந்த தோல்வி!

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது. கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், குஜராத் அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிபெற்றது.

16வது ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குஜராத் அணி சார்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 66 ரன்கள் சேர்த்தார்.

IPL 2023: Due to Mohit sharma heroic perfromance, Gujarat titans beat Lucknow Super Giants by 7 Runs

இதனைத் தொடர்ந்து லக்னோ அணி சார்பாக கேப்டன் கே.எல்.ராகுல் - கைல் மேயர்ஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. குஜராத் அணி சார்பாக வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட கே.எல்.ராகுல், ஒரு ரன் கூட அடிக்கவில்லை. இதனால் முதல் ஓவரை மெய்டன் ஓவராக வீசி குஜராத் அணி அதிரடியாக தொடங்கியது.

ஆனால் 2வது ஓவர் முதல் லக்னோ அணி அதிரடியை தொடங்கியது. கைல் மேயர்ஸ் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் பவுண்டரியாக விளாசி தள்ளினர். குறிப்பாக ரஷித் கான் வீசிய 5வது ஓவரில் 16 ரன்கள் குவிக்கப்பட்டது. இறுதியாக பவர் பிளே ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் குவித்தது. இதனால் லக்னோ அணியின் வெற்றிக்கு 84 பந்துகளில் 83 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. பின்னர் ரஷித் கான் பந்துவீச்சில் மேயர்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் கேஎல் ராகுல் - க்ருணால் பாண்டியா கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக 14 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 105 ரன்கள் சேர்த்தது. இதனிடையே கேப்டன் கேஎல் ராகுல் 38 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இந்த சூழலில் க்ருணால் பாண்டியா 23 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரன் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் கேஎல் ராகுல் - பதோனி கூட்டணி களத்தில் இருந்தது.

லக்னோ அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்டது. முகமது ஷமி வீசிய 19வது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றிபெற 12 ரன்கள் தேவைப்பட்டது. மோகித் சர்மா வீசிய முதல் பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட, அடுத்த பந்தில் கேப்டன் கேஎல் ராகுல் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஸ்டாய்னிஸ் அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க, கடைசி 3 பந்தில் லக்னோ அணி 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

IPL 2023: Due to Mohit sharma heroic perfromance, Gujarat titans beat Lucknow Super Giants by 7 Runs

4வது பந்தில் பதோனி 8 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாக, 5வது பந்தில் தீபக் ஹூடாவும் ரன் அவுட்டானார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 128 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் குஜராத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. லக்னோ அணி கடைசி 5 ஓவர்களில் வெறும் 22 ரன்கள் மட்டுமே அடித்தது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, April 22, 2023, 19:27 [IST]
Other articles published on Apr 22, 2023
English summary
IPL 2023: Gujarat registered a thrilling victory against Lucknow by 7 runs. In the last over, Lucknow needed 12 runs to win, but Gujarat picks 4 consecutive wickets.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+